என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
- இவரது உடலுக்கு நடிகர் செந்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நகைச்சுவை நடிகர் செந்தில் உடைந்து கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, மயில்சாமி நல்ல நடிகர், நடிகர் மட்டும் இல்லை எதார்த்தமான மனிதர். அவர் எல்லோரிடமும் நன்றாக பழகுவார். அன்பாக பழகக்கூடியவர். மயில்சாமிகிட்ட நைட் கூட பேசுனே. என்று செந்தில் கண்கலங்கிக் கொண்டே பேசினார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
- இவரது மறைவுக்கு முன்பு டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி
இந்நிலையில் நடிகர் மயில்சாமி மறைவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
- 'பஹீரா' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

பஹீரா
பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'பஹீரா' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hey Singles.. Are You Ready to Celebrate your Valentine's Day? @PDdancing 's #Bagheera releasing on March 3rd ?
— Done Channel (@DoneChannel1) February 18, 2023
An @Adhikravi Pain KILLER @RVBharathan @AmyraDastur93 @Ganesan_S_ @nambessan_ramya @jananihere @SGayathrie @ssakshiagarwal @AbinandhanR @selvakumarskdop pic.twitter.com/IT3Dqh6QoM
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
- இவரது மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மயில்சாமி - கமல்ஹாசன்
இந்நிலையில் மயில்சாமியின் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2023
- பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா, அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
- பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தமுரி தாரக ரத்னா நேற்று காலமானார்.
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரக ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரக ரத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நந்தமுரி தாரக ரத்னா
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவர சிகிச்சை பெற்று வந்த தாரக ரத்னா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

நந்தமுரி தாரக ரத்னா
39 வயதாகும் தாரகா ரத்னா, 2002-ம் ஆண்டு வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி.
- தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது.
மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி. தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் நடிகர் மயில்சாமி. திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மயில்சாமி மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலக கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.
- சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்து சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மயில்சாமி.
- கடைசியாக ‘கிளாஸ்மேட்ஸ்’ படத்திற்காக நடிகர் மயில்சாமி கொடுத்த டப்பிங் வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மயில்சாமி மறைவால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர். அவரது மறைவுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:- கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகள் செய்துள்ளார். சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்து சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மயில்சாமி. அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு என கூறியுள்ளார்.
இதனிடையே, கடைசியாக 'கிளாஸ்மேட்ஸ்' படத்திற்காக நடிகர் மயில்சாமி கொடுத்த டப்பிங் வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
- பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.
- பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.
சென்னை:
தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி.
இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.
ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா.
- இவரது திருமணம் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ஹன்சிகா
இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சமீபத்தில் ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில், ஹன்சிகா வேகமாக வளர அவரது தாயார் ஹார்மோன் ஊசி போட்டிருக்கலாம் என்று பல செய்திகள் பரவி வருகிறது. இதற்கு விளக்கமளித்துள்ள ஹன்சிகா, " எனக்கு 21 வயதாக இருந்த போது இதைப்பற்றி எழுதினார்கள். நான் எதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் வளர ஊசி போட்டுக்கொண்டதாக எழுதினார்கள். நான் 8 வயதில் நடிகையானேன். நான் பெண்ணாக வேகமாக வளர எனது அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக மக்கள் சொன்னார்கள்" என்று ஹன்சிகா கூறினார்.

தாயாருடன் ஹன்சிகா
ஹன்சிகாவின் தாயார் இது குறித்து கூறியதாவது, "இந்தச் செய்தி உண்மையென்றால் நான் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக மாறியிருப்பேன். இப்படி எழுதுபவர்களுக்கு பொது அறிவு என்ற ஒன்று இல்லையா என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நாங்கள் பஞ்சாபிகள். எங்களின் மகள்கள் 12-16 வயதில் வேகமாக வளர்வார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
- நடிகர் கிரண் அப்பாவரம் நடித்துள்ள திரைப்படம் 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' .
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
'ராஜா வாரு ராணி காரு', 'எஸ்.ஆர். கல்யாண மண்டபம்', 'செபாஸ்டியன்', 'சம்மதமே' போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் வசன உச்சரிப்பு, சுறுசுறுப்பான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் கிரண் அப்பாவரம். இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'மீட்டர்' மற்றும் 'ரூல்ஸ் ரஞ்சன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவைத் தவிர இதரப் படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

கிரண் அப்பாவரம்
இவரது முந்தைய படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை கிரண் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் தற்போது சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கிரண் அப்பாவரம்
இந்த வரிசையில், ஜிஏ2 பிக்சர்ஸ் பேனரில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள விறுவிறுப்பான குடும்பப் படமான 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' (விஷ்ணுவின் கதையை கேட்டால் புண்ணியம்) தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இப்படம் வெளியாகி உள்ளது. 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.
- கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
- இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

டாடா
இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா
இந்நிலையில், 'டாடா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கிலேச காதலா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்க ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






