எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கிரண் அப்பாவரமின் 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா'

நடிகர் கிரண் அப்பாவரம் நடித்துள்ள திரைப்படம் 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' .இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
கிரண் அப்பாவரம்
கிரண் அப்பாவரம்
Published on

'ராஜா வாரு ராணி காரு', 'எஸ்.ஆர். கல்யாண மண்டபம்', 'செபாஸ்டியன்', 'சம்மதமே' போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் வசன உச்சரிப்பு, சுறுசுறுப்பான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் கிரண் அப்பாவரம். இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'மீட்டர்' மற்றும் 'ரூல்ஸ் ரஞ்சன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவைத் தவிர இதரப் படங்களும் கைவசம் வைத்துள்ளார்.

கிரண் அப்பாவரம்

இவரது முந்தைய படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை கிரண் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் தற்போது சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கிரண் அப்பாவரம்

இந்த வரிசையில், ஜிஏ2 பிக்சர்ஸ் பேனரில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள விறுவிறுப்பான குடும்பப் படமான 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' (விஷ்ணுவின் கதையை கேட்டால் புண்ணியம்) தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இப்படம் வெளியாகி உள்ளது. 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com