என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரண் அப்பாவரம்"

    • கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
    • அவரது 11-வது திரைப்படமாக கே-ராம்ப் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

    கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.அதனை தொடர்ந்து தில்ருபா திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில் அவரது 11-வது திரைப்படமாக கே-ராம்ப் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் லுங்கி அணிந்த படி அவருக்கு பின் மது பாட்டில்களால் ஆன ஹார்ட் சின்னம் இடம் பெற்றுள்ளது.

    இப்படத்தை ஹாச்யா மூவீஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்ட் இணைந்து தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநரான ஜெயின்ஸ் நானி மற்றும் யுக்தி தரேஜா கதாநாயகியாக நடிக்கிறார். திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகிறது.

    • நடிகர் கிரண் அப்பாவரம் நடித்துள்ள திரைப்படம் 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' .
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    'ராஜா வாரு ராணி காரு', 'எஸ்.ஆர். கல்யாண மண்டபம்', 'செபாஸ்டியன்', 'சம்மதமே' போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் வசன உச்சரிப்பு, சுறுசுறுப்பான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் கிரண் அப்பாவரம். இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'மீட்டர்' மற்றும் 'ரூல்ஸ் ரஞ்சன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவைத் தவிர இதரப் படங்களும் கைவசம் வைத்துள்ளார்.


    கிரண் அப்பாவரம்

    இவரது முந்தைய படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை கிரண் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் தற்போது சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.


    கிரண் அப்பாவரம்

    இந்த வரிசையில், ஜிஏ2 பிக்சர்ஸ் பேனரில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள விறுவிறுப்பான குடும்பப் படமான 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' (விஷ்ணுவின் கதையை கேட்டால் புண்ணியம்) தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இப்படம் வெளியாகி உள்ளது. 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.

    ×