கிரண் அப்பாவரம் நடிக்கும் K-Ramp படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. அவரது 11-வது திரைப்படமாக கே-ராம்ப் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
கிரண் அப்பாவரம் நடிக்கும் K-Ramp படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.அதனை தொடர்ந்து தில்ருபா திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் அவரது 11-வது திரைப்படமாக கே-ராம்ப் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் லுங்கி அணிந்த படி அவருக்கு பின் மது பாட்டில்களால் ஆன ஹார்ட் சின்னம் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை ஹாச்யா மூவீஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்ட் இணைந்து தயாரிக்கிறது. படத்தை அறிமுக இயக்குநரான ஜெயின்ஸ் நானி மற்றும் யுக்தி தரேஜா கதாநாயகியாக நடிக்கிறார். திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com