என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
    • இவரின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

     


    நடிகை ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. இந்த தொடரின் முதல் எபிசோடில், ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும் பேசுகிறது.


    லவ் ஷாதி டிராமா

    லவ் ஷாதி டிராமா

    மேலும் அடுத்தடுத்த எபிசோடுகள், சிறு வயதிலயே ஹார்மோன் ஊசி எடுத்து கொண்டதாக வந்த செய்திகள் போன்ற பல விஷயங்களை பேசுகிறது. எபிசோட் அடுத்த கட்டத்தை எட்டும் போது, மணமகனும், மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்குத் தயாராவதையும், போலோ போட்டிக்குப் பிறகு, தனது மெஹந்தி நாளில் டெர்பி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற ஆசை பற்றியும் கூறுகிறது. ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனை ரசிகர்கள் பலரும் பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார்.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

    இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.


    வீரன்

    வீரன்

    ஹிப்ஹாப் ஆதி தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் வீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருவதாக அறிவித்திருந்தது.

     

    வீரன்

    வீரன்


    ஃபேண்டசி காமெடி ஆக்ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ளது.

    இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளான இன்று வீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • இவரது உடல் சென்னை வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    நகைச்சுவை நடிகர் மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

     


    சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் இருந்து வடபழனிக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.



    இவரது உடலுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். வடபழனி மின்மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    • மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • இவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

     


    இந்நிலையில் சாலிகிராமம் இல்லத்தில் இருந்து வடபழனி மின்மயானத்திற்கு நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

    • சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர்.

    பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரை 23, 24 வயது இருக்கும்போதே எனக்கு தெரியும். மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து அதற்கு பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு தெரியும்.

     

    மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி

    மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி

    அவர் தீவிர எம்.ஜி.ஆரின் ரசிகர், அதைவிட மிக தீவிர சிவனின் பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம், அப்போது நான் சினிமா துறையை பற்றி அவரிடம் கேட்பேன், அவர் சினிமாவை பற்றி பேசவே மாட்டார். இரண்டு விஷயங்களை பற்றி தான் பேசுவார். ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று சிவன். நாங்கள் இந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தும் கூட அதிக படங்கள் நடிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு அங்கே சென்றுவிடுவார்.

    அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு அவர் ஹீரோவாக நடித்து விட்டு வெற்றிகரமாக படம் ஓடுவது போன்று அவர் சந்தோஷப்படுவார். அங்கிருந்து ஒவ்வொரு தடவையும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார். கடைசி முறை கார்த்திகை தீபத்திற்கு என்னை தொடர்பு கொண்டார், நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை தொடர்பு கொண்டிருக்கிறார் என்னால் எடுக்கவே முடியவில்லை. அடுத்த முறை என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் பேச முடியவில்லை என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே மறந்துவிட்டேன், இப்போ அவரே மறைந்துவிட்டார்.

     

    செய்தியாளர்களை சந்தித்த ரஜினி

    செய்தியாளர்களை சந்தித்த ரஜினி

    சினிமா துறையில் இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இழப்பு பேரிழப்பு. ஒன்று விவேக், மற்றொன்று மயில்சாமி. இவர்களுடைய இழப்பு சினிமாதுறைக்கு மட்டுமில்லை, அவர்களுடைய நண்பர்களுக்கு மட்டுமில்லை சமூகத்திற்கே பேரிழப்பு. இரண்டு பேரும் நல்ல சிந்தனைவாதிகள்.

    மயில்சாமியின் இழப்பு தற்செயலாக நடந்தது கிடையாது, சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் கூட்டி சென்றுவிட்டார். அவருடைய குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கு சினிமா துறையில் நல்ல ஒரு எதிர்காலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

     

    கடைசியாக மயில்சாமி பங்கேற்ற நிகழ்ச்சி
    கடைசியாக மயில்சாமி பங்கேற்ற நிகழ்ச்சி

    நேற்று நடந்த சிவன் கோவில் நிகழ்ச்சியில் ரஜினி பாலபிஷேகம் செய்வதை நான் பார்க்க வேண்டும் என்று மயில்சாமி, டிரம்ஸ் சிவமணியிடம் சொல்லியிருக்கிறார். கட்டாயம் சிவமணியிடம் இதைபற்றி பேசிவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்.

    இவ்வாறு ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    • இவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     

    மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி

    மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி


    சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


    சற்று நேரத்தில் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி ‘பகாசூரன்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் குறித்து இயக்குனர் அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

     

    பகாசூரன்

    பகாசூரன்


    'பகாசூரன்' திரைப்படம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 17-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பகாசூரன் திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது. வாழ்த்துக்கள் என்னுடைய நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இவரது மறைவுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

     

    தனுஷுடன் நடித்த மயில்சாமி

    தனுஷுடன் நடித்த மயில்சாமி


    கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நல்ல திறமை வாய்ந்தவர். மனம் உடைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.
    • இவர் தனது 100 ரசிகர்களை தேர்வு செய்து விமானத்தில் மணாலிக்கு சுற்றுலா அனுப்பி உள்ளார்.

    தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை பிறமொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் வெளியானது. தற்போது குஷி படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

     

    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா


    சில தினங்களுக்கு முன்பு தனது 100 ரசிகர்களை தேர்வு செய்து சுற்றுலா அனுப்ப இருப்பதாக விஜய் தேவரகொண்டா அறிவித்து இருந்தார். அதற்கான அனைத்து செலவுகளும் ஏற்பேன் என்றும் தெரிவித்து இருந்தார். எந்த இடம் என்பதை தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என்றும் கூறியிருந்தார்.


    விஜய் தேவரகொண்டா

    விஜய் தேவரகொண்டா

    இந்நிலையில் தற்போது 100 ரசிகர்களையும் தேர்வு செய்து மணாலிக்கு சுற்றுலா அனுப்பி உள்ளார். விமானத்தில் செல்லும் ரசிகர்கள் கையசைத்து உற்சாகமாக கூச்சல் போடும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் தேவரகொண்டா வெளியிட்டு 100 பேரை சுற்றுலா அனுப்புவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி.
    • பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட சூரி மாணவர்களிடையே நகைச்சுவையாக பேசினார்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் சூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சூரி, தனது பள்ளி படிப்பு குறித்து மாணவர்களிடையே வேடிக்கையாக பேசினார்.

    அவர் பேசியதாவது, உங்களை எல்லாம் வாத்தியார்கள் தான் பாஸ் செய்ய வைத்திருப்பார்கள். ஆனால், என்னை என் அப்பா தான் பாஸ் செய்ய வைத்தார். 6-ம் வகுப்பு படிக்க மதுரை நகரத்திற்கு போக வேண்டியிருந்தது. படிப்பு முடிக்கும்போது எங்க அப்பா பள்ளிக்கு வந்தார். குட் மார்னிங் டீச்சர், மை நேம் ஆர்.முத்துசாமி, மை பாதேர் நேம் இஸ் ராமசாமி. மை சன்ஸ் நேம் ராம் அண்ட் லட்சுமணன், தே ஆர் டுவின்ஸ், ராம் கலெக்டர், லட்சுமணன் என்ஜினீயர். எப்படியாவது நீங்கள்தான் கொண்டு வர வேண்டும் சார்.


    சூரி

    சூரி

    அஸ்எ பாதராக நான் உங்களுக்கு புல் கோஆப்ரேட் பன்னுவேன் சார். இதுல 1½ கிலோ மட்டன் இருக்கு. இதுல 1½ கிலோ சிக்கன் இருக்கு. எனிடைம் டெல்லிங் ஐ வில் கம்மிங். அவ்வளவு தான் 6-ம் வகுப்பு பாஸ்.

    இதே தான் 7-ம் வகுப்பிலும் 1½ கிலோ மட்டன், 1½ கிலோ சிக்கன் கொடுத்து பாஸ் ஆனேன். அதன்பின் 8-ம் என்னை வழக்கம் போல எங்கப்பா பள்ளிக்கு அழைத்து சென்றார். குட்மார்னிங் டீச்சர் என்ற போது நான் நிப்பாட்டுங்க அப்பா என்றேன். அவர் என்னை சும்மா இருடா என்று சொல்லி விட்டு சேம் டயலாக் அடித்துவிட்டு இந்த பக்கம் 1½ கிலோ சிக்கன் என சொல்லும் போதே அந்த டீச்சர் கிரவுண்ட்ல எங்களை ஓட விட்டார். ஏன்னா, அந்த டீச்சர் சுத்த சைவம் என்று தனது பிளேஸ்பேக் கூறி அரங்கை அதிர வைத்தார் சூரி.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    • இவரது உடலுக்கு நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் உடலுக்கு நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள குலதெய்வ கோவிலில் நடிகர் வடிவேலு வழிபாடு செய்தார்.
    • சமீபத்தில் அவரது தாயார் மறைந்த நிலையில் கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே நின்று வழிபாடு செய்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டுபரமக்குடியில் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் உள்ளது. இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும். இந்த கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்.

     

    கோவிலில் வழிபாடு செய்த வடிவேலு

    கோவிலில் வழிபாடு செய்த வடிவேலு

    சமீபத்தில் அவரது தாயார் மறைந்த நிலையில் கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே நின்று வழிபாடு செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவை கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் அவர் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    ×