என் மலர்

  சினிமா செய்திகள்

  ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றிய உண்மைகளை, திறந்து காட்டும் ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா
  X

  ஹன்சிகா

  ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றிய உண்மைகளை, திறந்து காட்டும் "ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
  • இவரின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

  தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


  நடிகை ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியானது. இந்த தொடரின் முதல் எபிசோடில், ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும் பேசுகிறது.


  லவ் ஷாதி டிராமா

  மேலும் அடுத்தடுத்த எபிசோடுகள், சிறு வயதிலயே ஹார்மோன் ஊசி எடுத்து கொண்டதாக வந்த செய்திகள் போன்ற பல விஷயங்களை பேசுகிறது. எபிசோட் அடுத்த கட்டத்தை எட்டும் போது, மணமகனும், மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்குத் தயாராவதையும், போலோ போட்டிக்குப் பிறகு, தனது மெஹந்தி நாளில் டெர்பி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற ஆசை பற்றியும் கூறுகிறது. ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனை ரசிகர்கள் பலரும் பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  Next Story
  ×