பகாசூரன் படம் குறித்து இயக்குனர் அனுராக் காஷ்யப் பதிவு

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி ‘பகாசூரன்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.இப்படம் குறித்து இயக்குனர் அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பகாசூரன் படம் குறித்து இயக்குனர் அனுராக் காஷ்யப் பதிவு
Published on

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

பகாசூரன்
பகாசூரன்

பகாசூரன்

'பகாசூரன்' திரைப்படம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 17-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பகாசூரன் திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது. வாழ்த்துக்கள் என்னுடைய நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com