என் மலர்
சினிமா செய்திகள்

மனம் உடைந்துவிட்டேன்.. மயில்சாமி மறைவுக்கு தனுஷ் இரங்கல்
- தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
- இவரது மறைவுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தனுஷுடன் நடித்த மயில்சாமி
கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நல்ல திறமை வாய்ந்தவர். மனம் உடைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
A great talent. This is heartbreaking. pic.twitter.com/L79LmnT3j4
— Dhanush (@dhanushkraja) February 19, 2023