என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அறிமுக இயக்குனர் ஷிவ நடராஜன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “புரொடக்ஷன் நம்பர் 1” .
    • இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி ராம் நடிக்கிறார்.

    தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷிவ நடராஜன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக தொப்பி  படம் மூலம் அறிமுகமான முரளி ராம் நடிக்கிறார். கதாநாயகியாக தேவிகா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.


    புதுமையான திரைக்கதையில் மாறுப்பட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக  உருவாகும் இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார். இப்படத்தின்  படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள  எளிமையான பூஜையுடன் இன்று துவங்கியது. மேலும், இதன் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி  பகுதிகளில் ஒரே கட்டமாக நடை பெறவுள்ளது. படத்தின் மற்ற அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் தனுஷ் போயஸ்கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார்.
    • இங்கு தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார்.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி உலக அளவில் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சென்னை போயஸ்கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டில் தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார்.


    சிவராத்திரியை முன்னிட்டு இவரது வீட்டில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் தனுஷின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, "தம்பி தனுஷின் புதிய வீடு… கோவில் உணர்வு எனக்கு.. வாழும் போதே தாய்,தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள்… மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள்.. இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க" என்று பதிவிட்டுள்ளார்.

    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி போஸ்டர்

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'.
    • கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார்.


    1947- ஆகஸ்ட் 16

    இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.


    1947- ஆகஸ்ட் 16

    தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.


    1947- ஆகஸ்ட் 16

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'கோட்டிக்கார பயலே' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. என்.எஸ்.பொன்குமார் வரிகளில் மீனாட்சி இளையராஜா மற்றும் ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.




    • நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’.
    • இப்படத்தை இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கியுள்ளார்.

    பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.


    நோ என்ட்ரி

    நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'நோ என்ட்ரி'. இதில் ஆதவ் கண்ணதாசன், மானஸ், ரன்யா ராவ், ஜெயஸ்ரீ மற்றும் ஜான்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார்.



    நோ என்ட்ரி

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட நாய்கள் மனிதர்களை தாக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த டிரைலரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
    • தற்போது ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக உரையாடி வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், சமீபத்தில் வெளியான பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஷாருக்கான்

    ஷாருக்கான்

    இந்நிலையில் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு செல்ல பிராணிகள் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், என்னிடம் நிறைய செல்ல பிராணிகள் உள்ளன. ஆனால் அதனுடைய புகைப்படங்களை நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட விரும்பவில்லை. அவை என்னை விட பிரபலமாவதை நான் விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

    • மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
    • இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'தாய் கிழவி' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.


    திருச்சிற்றம்பலம்

    இந்நிலையில், 'தாய் கிழவி' பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தக்ஸ்’.
    • இப்படபடம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'. இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இதில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'தக்ஸ்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், பத்திரிக்கையாளர்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் படத்தின் இயக்குனர் பிருந்தா பேசியதாவது, "ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது.


    தக்ஸ் படக்குழு

    தக்ஸ் படக்குழு

    ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார்.

    பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர்.
    • சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.


    ரோபோ சங்கர்

    சமீபத்தில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.
    • இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக 100வது நாளை கடந்துள்ளது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர்.


    லவ் டுடே

    லவ் டுடே

    இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அதில், பாந்தோம் ஃபிலிம்ஸ் (Phantom Films) உடன் இணைந்து லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சுவாரஸ்யமான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இந்தப் படத்தை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல காத்திருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். இப்படம் இந்தியில் ரீமேக் ஆவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நடிகை திரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    திரிஷா

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை திரிஷா மகா சிவராத்திரியை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'வாத்தி' திரைப்படத்தை பாராட்டி இயக்குனர் பாரதி ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கள்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கிறேன். அப்படி என் பயணத்தின் போது ஸ்தம்பித்து நின்ற இடம் தான் 'வாத்தி'.


    வாத்தி

    கல்வி இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை கூறுகிறது 'வாத்தி'. தனுஷ் என் பிள்ளை மாதிரி. அவன் பொழுதுபோக்கிற்காக படம் செய்தாலும் சமுதாய நோக்கத்திற்காக செய்கிறான். இப்படி ஒரு பிள்ளை கிடைப்பதற்கு திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும். அவன் நடிகன் மட்டுமல்ல எழுத்தாளன், பாடகன் சிந்தனை மனிதன் தனுஷ். எத்தனையோ முத்துக்கள் இருக்கிறது திரையுலகில் அதில் ஒரு சிறந்த முத்து சமுத்திரக்கனி. சம்யுக்தா விடம் ஒரு டீசருக்கான அம்சம் இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் ஒரு பெரிய வரப்பிரசாதம். இந்த வருடத்தில் இசையமைப்பிற்கும் சரி நடிப்புக்கும் சரி ஜி.விக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.


    ×