என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • நடிகர் பகத் பாசிலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    கேரளாவில் மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மோகன்லால் படங்களை தயாரித்த சினிமா தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கேரள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசிலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இந்த விசாரணை நடந்துள்ளது.

    • நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    அஜித் - விக்னேஷ் சிவன்

    இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.


    அஜித் - அருண் விஜய்

    இந்நிலையில், ஏகே62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி, ஏகே62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை பாயல் சர்க்கார் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
    • இவர் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளித்துள்ளார்.

    பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார். இவர் பல இந்தி படங்களிலும் வெப்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் உள்ள பராக்பூர் போலீஸ் நிலையத்தில் பாயல் புகார் அளித்துள்ளார்.


    பாயல் சர்க்கார்

    அவர் அளித்துள்ள புகார் மனுவில், "எனது செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் வந்தன. அந்த எண்ணை ஆராய்ந்தபோது அது ஜிம் பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. அவர் என்னுடைய தூரத்து உறவினரும் ஆவார். அந்த எண்ணை நான் பிளாக் செய்தேன். உடனே இன்னொரு நம்பரில் இருந்து ஆபாச குறுந்தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்பினார். அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர்கள் பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தீர்க்கதரிசி’.
    • இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் சார்பில் பி.சதீஷ் குமார் தயாரிப்பில், பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது.


    தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குனர்கள் மிகச்சிறந்த இயக்குனர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்" என்று பேசினார்.


    தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா

    நடிகர் சத்யராஜ் பேசியதாவது, "இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் இந்த இயக்குனர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.

    • நடிகர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா’ படத்தின் மூலம் உலக அளவில் அறியப்பட்டார்.
    • ’காந்தாரா’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    ரிஷப் ஷெட்டி

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழா நேற்று (பிப்ரவரி 20) மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.
    • இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக 100வது நாளை கடந்துள்ளது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர்.


    லவ் டுடே

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக் விரைவில் உருவாகவுள்ளது. இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 45 நிமிடங்கள் உள்ள இந்த மேக்கிங் வீடியோ இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • தனுஷ் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    சார் வெற்றி விழா

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 'சார்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


    • ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
    • தற்போது ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், சமீபத்தில் வெளியான பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஓய்வுபெற்ற பிறகு உங்களுக்கு அடுத்த பெரிய நட்சத்திரம் யார்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக்கான், "நான் ஒருபோதும் நடிப்பிலிருந்து ஓய்வு பெற மாட்டேன். ஒருவேளை என்னை வீழ்த்த நினைத்தால், நான் முன்பைவிடவும் அதிரடியாக வருவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அறிமுக இயக்குனர் ஷிவ நடராஜன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “புரொடக்ஷன் நம்பர் 1” .
    • இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி ராம் நடிக்கிறார்.

    தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷிவ நடராஜன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக தொப்பி  படம் மூலம் அறிமுகமான முரளி ராம் நடிக்கிறார். கதாநாயகியாக தேவிகா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.


    புதுமையான திரைக்கதையில் மாறுப்பட்ட ரொமாண்டிக் க்ரைம் திரில்லராக  உருவாகும் இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார். இப்படத்தின்  படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள  எளிமையான பூஜையுடன் இன்று துவங்கியது. மேலும், இதன் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி  பகுதிகளில் ஒரே கட்டமாக நடை பெறவுள்ளது. படத்தின் மற்ற அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் தனுஷ் போயஸ்கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார்.
    • இங்கு தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார்.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி உலக அளவில் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சென்னை போயஸ்கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டில் தனது தாய் விஜயலட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜாவுடன் குடியேறியுள்ளார்.


    சிவராத்திரியை முன்னிட்டு இவரது வீட்டில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் தனுஷின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, "தம்பி தனுஷின் புதிய வீடு… கோவில் உணர்வு எனக்கு.. வாழும் போதே தாய்,தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணர படுகிறார்கள்… மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள்.. இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க" என்று பதிவிட்டுள்ளார்.

    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி போஸ்டர்

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'.
    • கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார்.


    1947- ஆகஸ்ட் 16

    இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.


    1947- ஆகஸ்ட் 16

    தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.


    1947- ஆகஸ்ட் 16

    இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'கோட்டிக்கார பயலே' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. என்.எஸ்.பொன்குமார் வரிகளில் மீனாட்சி இளையராஜா மற்றும் ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.




    ×