வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய 'வாத்தி' படக்குழு

தனுஷ் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’.இப்படம் உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சார் வெற்றி விழா
சார் வெற்றி விழா
Published on

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சார் வெற்றி விழா

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 'சார்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com