ஜிம் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகை

நடிகை பாயல் சர்க்கார் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இவர் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளித்துள்ளார்.
பாயல் சர்க்கார்
பாயல் சர்க்கார்
Published on

பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார். இவர் பல இந்தி படங்களிலும் வெப்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் உள்ள பராக்பூர் போலீஸ் நிலையத்தில் பாயல் புகார் அளித்துள்ளார்.

பாயல் சர்க்கார்

அவர் அளித்துள்ள புகார் மனுவில், "எனது செல்போனுக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் வந்தன. அந்த எண்ணை ஆராய்ந்தபோது அது ஜிம் பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. அவர் என்னுடைய தூரத்து உறவினரும் ஆவார். அந்த எண்ணை நான் பிளாக் செய்தேன். உடனே இன்னொரு நம்பரில் இருந்து ஆபாச குறுந்தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்பினார். அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com