என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • NGL01220223: கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • சாட்சி விசாரணைக்காக நடிகை மஞ்சுவாரியர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் கட்டத்தில் இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையில் இறங்கிய போலீசார் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் மற்றும் நடிகை காவ்யா மாதவன் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். போலீசாரின் இந்த முடிவுக்கு நடிகர் திலீப் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை நீட்டித்து கொண்டே செல்வதற்காகவே சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க கூடாது என மனுவில் கூறியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. மஞ்சு வாரியரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக நடிகை மஞ்சுவாரியர் மீண்டும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலசந்திரகுமார், போலீசிடம் அளித்த ஆடியோவில் இருப்பது நடிகர் திலீப்பின் குரல் தானா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம்.
    • இவர் பழனி கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த மாதம் 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 29ம் தேதி தைப்பூச கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த 5ந் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடிகைகள் அமலாபால், சமந்தா, நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன் உள்பட ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இன்று நடிகர் சந்தானம் பழனி கோவிலுக்கு சென்று அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


    கோவில் தரிசனத்திற்கு சென்ற சந்தானம்
    கோவில் தரிசனத்திற்கு சென்ற சந்தானம்


    இதனைத் தொடர்ந்து அவருடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்தடைந்தார். பழனி அருகே சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் படபிடிப்புக்கு இடையே பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.

    • பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.
    • தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

    2007ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, அசூரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றார். தற்போது நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • நடிகர் பிரபு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • அவருக்கு லேசர் அறுவைச்சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது.

    சென்னை:

    நடிகர் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு இருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு லேசர் அறுவைச்சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது. பிரபு நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான் போஸ்டர்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பதான்' படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து 'பதான்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.



    • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக இணையத்தில் பேசிவருகின்றனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


    லியோ படக்குழு

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இவர் காஷ்மீர் சென்றுள்ளதால் லியோ படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இருந்தும் படக்குழு தரப்பிலிருந்து இந்த தகவலை உறுதிப் படுத்தவில்லை.


    • கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார்.
    • இந்த வழக்கு தொடர்பாக 20 பேருக்கு குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டது.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனீல் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது.

    இதையடுத்து 2-ம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டது. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் உள்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இரண்டாம் கட்ட விசாரணைக்காக கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். மஞ்சு வாரியர் உட்பட நான்கு பேரிடம் தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை இன்னும் ஆறு மாதத்திற்குள் முடித்துவிட கேரள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
    • கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

    இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத்துறையில் நடிகை ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.




    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவர் கடைசியாக நடித்த 'மாம்' திரைப்படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவரது மகள் ஜான்வி கபூர், தற்போது பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


    ஜான்வி கபூர்

    ஜான்வி கபூர்


    இந்நிலையில் ஸ்ரீதேவியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தல்பப்பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்னும் உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தி மற்றும் கன்னடத்தில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம்.
    • இவர் செல்பி எடுக்க மறுத்ததால் எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் இவரை தாக்கினர்.

    இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம். இவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவரது இசை நிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பட்டர்பேகரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க விரும்பினர்.


    அப்போது நேரலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்ததால் சோனு நிகாம் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் பாதுகாவலர்களையும் பாடகர் சோனு நிகாமையும் கடுமையாக தாக்கினர். இதில் சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது சோனு நிகாம் நன்றாக இருக்கிறார், அவரது குரு, குலாம் முஸ்தபா கான், அவரது நெருங்கிய உதவியாளர், ரப்பானி கான் மற்றும் அவரது பாதுகாவலர் அனைவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பார்டர்’.
    • இப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.


    பார்டர்

    இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியாகவில்லை. இதையடுத்து இப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


    பார்டர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து 'பார்டர்' படக்குழு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " அருண் விஜய்யின் 'பார்டர்' திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலைகளால் வெளியிட முடியவில்லை. இந்த திரைப்படம் உங்கள் பொறுமைக்கு தகுதியானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

    மேலும், இப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் எனவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.


    • மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • நடிகர் பகத் பாசிலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    கேரளாவில் மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மோகன்லால் படங்களை தயாரித்த சினிமா தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் கேரள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசிலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இந்த விசாரணை நடந்துள்ளது.

    • நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.


    அஜித் - விக்னேஷ் சிவன்

    இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக 'தடம்', 'மீகாமன்', 'கலகத்தலைவன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.


    அஜித் - அருண் விஜய்

    இந்நிலையில், ஏகே62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி, ஏகே62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×