என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பகாசூரன்’.
    • இப்படத்திற்காக இயக்குனர் மோகன் ஜி சாலைகளில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

    பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


    போஸ்டர் ஒட்டிய மோகன் ஜி
    போஸ்டர் ஒட்டிய மோகன் ஜி

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பகாசூரன் படத்திற்காக சென்னையில் உள்ள சாலைகளில் படத்தின் போஸ்டரை ஒட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து படத்திற்காக எளிமையாக அவரே போஸ்டர் ஒட்டியதை பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.

    • இயக்குனர் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
    • இப்படத்தின் முதல் பாடலான 'கோட்டிக்கார பயலே' பாடல் சமீபத்தில் வெளியானது.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் ரமணா, கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார்.


    1947- ஆகஸ்ட் 16

    இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.


    1947- ஆகஸ்ட் 16

    தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.


    1947- ஆகஸ்ட் 16 போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'கோட்டிக்கார பயலே' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. என்.எஸ்.பொன்குமார் வரிகளில் மீனாட்சி இளையராஜா மற்றும் ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கோட்டிக்கார பயலே' பாடல் தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகர் பிரசாந்த் தற்போது நடித்துள்ள 'அந்தகன்'.
    • இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

     


    இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.


    கண்ணிலே பாடல் அறிவிப்பு
    கண்ணிலே பாடல் அறிவிப்பு

    இந்நிலையில் அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலே வீடியோ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.


    மார்க் ஆண்டனி படக்குழு

    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


    மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளம்

    அப்போது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

     

    மோகன்லால்

    மோகன்லால்


    இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் முறையான சான்றிதழ் இருப்பதாகவும், தந்தத்திற்காக எந்த யானையையும் கொல்லவில்லை எனவும் நடிகர் மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.


    மோகன்லால்

    மோகன்லால்


    பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.


    மோகன்லால்

    மோகன்லால்


    இந்நிலையில் நடிகர் மோகன்லால் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்தது.

    இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.


    சென்னை தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ.ஆர்.ரகுமான்

    அதாவது, இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான 'சந்தனக்கூடு' என்ற 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்விற்கான அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர்.

    • பத்து தல படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


    பத்து தல

    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    பத்து தல

    இந்நிலையில், 'பத்து தல' திரைப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு உருவாக்கி வருவதாகவும் அதில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. இதனை மறுத்துள்ள இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எங்களின் strategy படி சிம்புவை புரோமோ வீடியோவில் கொண்டு வரவில்லை. அவருடைய பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம். 'பத்து தல' படத்தின் புரோமோஷன் குறித்து தயாரிப்பாளர்களுக்கு தெளிவான யோசனை உள்ளது. நாங்கள் வெறுப்பு பேச்சை வெறுக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    தங்கலான்

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


    ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் 

    ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் 

    இந்நிலையில் தங்கலான் படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
    • இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.


    கவினின் பதிவு
    கவினின் பதிவு

    இந்நிலையில் டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். தனுஷ் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து இருவரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    • நகைச்சுவை நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தவர் சுபி சுரேஷ்.
    • இவர் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    கேரள சினிமாவில் நகைச்சுவை நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தவர் சுபி சுரேஷ். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42.


    சுபி சுரேஷ்

    நடிகை சுபி சுரேஷ், 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் எதிர்காலம் அதிகம் உள்ள ஒரு கலைஞரை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

    துணிவு

    துணிவு


    போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டினர். 'துணிவு' திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


    சில்லா சில்லா பாடல்

    சில்லா சில்லா பாடல்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று பலரின் கவனத்தை ஈர்த்த சில்லா சில்லா பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • NGL01220223: கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • சாட்சி விசாரணைக்காக நடிகை மஞ்சுவாரியர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் காரில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் கட்டத்தில் இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையில் இறங்கிய போலீசார் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் மற்றும் நடிகை காவ்யா மாதவன் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். போலீசாரின் இந்த முடிவுக்கு நடிகர் திலீப் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையை நீட்டித்து கொண்டே செல்வதற்காகவே சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க கூடாது என மனுவில் கூறியிருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. மஞ்சு வாரியரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக நடிகை மஞ்சுவாரியர் மீண்டும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலசந்திரகுமார், போலீசிடம் அளித்த ஆடியோவில் இருப்பது நடிகர் திலீப்பின் குரல் தானா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

    ×