என் மலர்
சினிமா செய்திகள்

சுபி சுரேஷ்
கேரளாவில் பிரபல நகைச்சுவை நடிகை உடல்நலக் குறைவால் காலமானார்
- நகைச்சுவை நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தவர் சுபி சுரேஷ்.
- இவர் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேரள சினிமாவில் நகைச்சுவை நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தவர் சுபி சுரேஷ். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42.
சுபி சுரேஷ்
நடிகை சுபி சுரேஷ், 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் எதிர்காலம் அதிகம் உள்ள ஒரு கலைஞரை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
Next Story






