என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என். இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'
    • இப்படம் நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.

    மேலும், பாடகர் மனோ, மா.கா.பா. ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் மனோ பேசியதாவது, '' இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், மிர்ச்சி சிவா ஆகியோருக்கு நன்றி. 'சிங்காரவேலன்' படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

    ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குனரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு. என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படக்குழு

    'சிங்காரவேலன்' படப்பிடிப்பின் போது ஒரு முறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குனர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அதன் போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் 'வணக்கம்' வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்." என்றார்.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரியவன்’.
    • இப்படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' 'திருச்சிற்றம்பலம்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில் கமர்ஷியல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரியவன்'.


    அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

    எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் ஆகியோர் இசை மற்றும் பாடல் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள சமீபத்தில் நடைபெற்றது.


    அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்யராஜ் பேசியதாவது, "அரியவன் படம் டிரைலர் நன்றாக உள்ளது எல்லோருக்கும் வாழ்த்துகள். எப்போதும் நம் மனதில் சில பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பல காலமாக ஒலித்த பாடல் கண்கள் இரண்டால் பாடல். ஜேம்ஸ் வசந்தனின் அந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப்படத்திலும் அருமையான பாடல் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.

    இயக்குனர் மித்ரனுடன் 'உத்தம புத்திரன்' படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர் சாந்தமானவர். அவர் புது முகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாகக் கதை மிக நல்ல கதையாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாகப் படமெடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கு நன்றி. நாயகனுடைய கண் உயிரோட்டமாக இருக்கிறது. அவர் நல்ல படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தில் உழைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பேசினார்.


    அரியவன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

    இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது, " இப்படத்தில் இரண்டாவது பாடலை நான் இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் இப்பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குனர் மித்ரன் ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அவர் மிகப்பெரிய இயக்குனர் மிக நன்றாகப் பாடலை உருவாக்கியுள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று பேசினார்.

    • நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பதான்’.
    • இப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்துள்ளது.


    பதான்

    அதாவது, அமீர்கான் நடித்த 'டங்கல்' திரைப்படம் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1968 கோடியும் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1810 கோடி வசூலையும் அதேபோல் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த 2022- ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1200 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.


    பதான்

    மேலும் யஷ் நடித்த 'கேஜிஎப் 2'திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1250 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் தற்போது 'பதான்' திரைப்படம் ஐந்தாவதாக இணைந்துள்ளது. இதையடுத்து அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் இனி அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    • நடிகர் சிவா தற்போது 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

    அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

    மேலும், பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார்.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

    ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் சிவாவை ரோகித் சர்மா உடன் ஒப்பிட்டு பலவிதமான மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

    இது குறித்து சிவா கூறியதாவது, "என்னையும் ரோஹித் சர்மாவையும் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போல் கிரிக்கெட் ஆட முடியாது. அதேபோல என்னைப்போல அவரால் டான்ஸ் ஆட முடியாது' என்று கலகலப்பாக பேசினார்.

    • இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    அருண் விஜய் பதிவு

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் படப்பிடிப்பு தளத்தில் சமையல் செய்துள்ளார். அதாவது, 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவை அருண் விஜய்யை சமைக்கும் வீடியோவை அவர் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • பாலிவுட்டின் திரைப்பிரபலங்கள் ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் திருமணம் செய்து கொண்டனர்.
    • சமீபத்தில் ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் கங்குபாய் கத்தியவாடி, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.

    கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஆலியா பட் மும்பையில் உள்ள தனது வீட்டின் ஓய்வு அறையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    வெளியான ஆலியாபட் புகைப்படம்

    இதுகுறித்து ஆலியாபட் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் எனது வீட்டில் மதியம் நேரத்தில் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ என்னை கண்காணிப்பதாக உணர்ந்தேன். நிமர்ந்து பார்த்தபோது எனது பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இருந்த இரு ஆண்கள் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தேன். எந்த உலகில் இது அனுமதிக்கப்படுகிறது? இது தனி நபர் மீதான அத்துமீறல்" என்று மும்பை போலீசை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து ஆலியா பட்டுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆலியா பட்டின் பதிவினை குறிப்பிட்டு நடிகை அனுஷ்கா சர்மா, "இவர்கள் இவ்வாறு செய்வது முதல்முறை அல்ல. இரண்டு வருடத்திற்கு முன்னர் நாங்களும் இது தொடர்பாக பேசினோம். இம்மாதிரியான செயல்கள் அவர்களுக்கு மரியாதை அளித்திருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இது முற்றிலும் அவமானமானது. நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் எங்கள் மகளின் படத்தை வெளியிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத்.
    • இவர் சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.

    தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.


    கங்கனா ரணாவத்

    இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில், மும்பையில் தாதா சாகேப் பால்கே இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும், சிறந்த நடிகைக்கான விருது அவரது மனைவி அலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது. சினிமா வாரிசுகள் என்பதால் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கங்கனா சாடி உள்ளார்.

    "விருதுகள் பெறும் தகுதி இவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா. சிறந்த நடிகருக்கான விருது 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டிக்கும், நடிகைக்கான விருது மிருணாள் தாகூருக்கும், சிறந்த படத்துக்கான விருது 'காந்தாரா'வுக்கும் வழங்கி இருக்க வேண்டும்'' என்று இணையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    • 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இன்று இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது.

    லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.


    மார்க் ஆண்டனி படக்குழு

    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


    மார்க் ஆண்டனி

    அப்போது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளம்

    இந்நிலையில், இந்த விபத்து குறித்து நடிகர் விஷால் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்ற பகிர்ந்துள்ளார். அதில், "சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் என் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘கடுவா’.
    • இப்படம் தமிழில் வெளியாகவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கடுவா'. இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.


    கடுவா

    இந்நிலையில், 'கடுவா' திரைப்படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'கடுவா' திரைப்படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.


    கடுவா போஸ்டர்

    நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோல்டு' மற்றும் 'காப்பா' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதையடுத்து 'கடுவா' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • தனுஷின் 50-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'வாத்தி' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    தனுஷ் 50-வது பட போஸ்டர்

    தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


    ஏ.ஆர்.ரகுமான் - தனுஷ்

    மேலும், இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக செய்தி பரவி வருகிறது.

    இதற்கு முன்பு தனுஷ் பா.பாண்டி படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படம் வருகிற ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    கிங் ஆஃப் கோதா

    ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.


    கிங் ஆஃப் கோதா

    'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 95 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும், 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    • இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’.
    • இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


    அகிலன்

    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    அகிலன் போஸ்டர்

    அதன்படி, 'அகிலன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    ×