ரோஹித் சர்மாவால் என்னைப்போல டான்ஸ் ஆட முடியாது.. நடிகர் சிவா கலகல பேச்சு..

நடிகர் சிவா தற்போது 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
ரோஹித் சர்மா - மிர்சி சிவா
ரோஹித் சர்மா - மிர்சி சிவா
Published on

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

மேலும், பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார்.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் சிவாவை ரோகித் சர்மா உடன் ஒப்பிட்டு பலவிதமான மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

இது குறித்து சிவா கூறியதாவது, "என்னையும் ரோஹித் சர்மாவையும் ஒப்பிட்டு நிறைய மீம்ஸ்கள் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போல் கிரிக்கெட் ஆட முடியாது. அதேபோல என்னைப்போல அவரால் டான்ஸ் ஆட முடியாது' என்று கலகலப்பாக பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com