என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
- இவர் தற்போது செல்பி திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இவரது நடிப்பில் தயாராகி உள்ள 'செல்பி' இந்தி படம் திரைக்கு வருகிறது. மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக இது தயாராகி உள்ளது. செல்பி படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்தப்படத்தை அக்ஷய்குமார் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அதாவது அவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு 3 நிமிடங்களில் ரசிகர்களுடன் 184 செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ராக் 3 நிமிடங்களில் 105 செல்பி எடுத்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. அவரது சாதனையை அக்ஷய்குமார் முறியடித்துள்ளார். இந்த சாதனையை ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
- 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார்.

மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.

இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் தனுஷ் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் munnai நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார்.
- தவறான தகவல்களை வெளியிடும் யூடூயூப் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என மறைந்த மயில்சாமியின் மகன்கள் கூறி உள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது. " என் அப்பா மறைவின் போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி, ஊடகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் நன்றி. என் அப்பாவின் ரசிகர்கள் என்று சொல்லமாட்டேன் நண்பர்கள் என்று சொல்வேன் இரண்டு நாட்களாக உலகம் முழுவதிலிருந்து இங்கு வந்து நின்றீர்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அதிகளவில் வந்திருந்தனர் அவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி.
ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தி வந்தது. எனவே உடனிருந்த நான் விளக்கமளிக்கிறேன். கேளம்பாக்கம் அருகிலுள்ள மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நான் அப்பா உள்ளிட்டவர்கள் 7.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு சென்றோம். இரவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நள்ளிரவு 2.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் வீட்டிற்கு வரும் வழியில் பேசிக்கொண்டே வந்தோம். வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியில் செய்தி பார்த்தோம்.
நான் உறங்கச்சென்ற பின் 10 நிமிடத்தில் அம்மா என்னை அழைத்தார், மூச்சு விட அப்பாவிற்கு சிரமமாக இருப்பதாக சொன்னார். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நான் கார் ஓட்டினேன் திடீரென என் மேல் சாய்ந்து விட்டார். என்னால் தொடர்ந்து கார் ஓட்ட இயலவில்லை, பின்பு ஆட்டோ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருந்தபோதும் நான் எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று நினைத்தேன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தர்மம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் இருக்கிறார் என்று சொல்வார். நாங்கள் சொல்கிறோம் தர்மம் எங்குள்ளதோ அங்கு எம்.ஜி.ஆர், என் அப்பா, விவேக் ஆகியோர் உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தான் காலை 6மணிக்கு போன் செய்தோம். அப்போது அவரை தொடர்புக்கொள்ள இயலவில்லை, பின்னர் அவர் வருவதாக சொன்னார்கள் நேரில் சந்தித்து எங்களுக்கு ஆறுதல் கூறினார்.
எங்கள் அப்பா எங்களிடம் எப்பவும் பொய் சொல்லாதீர்கள். நேர்மையாக இருங்கள் என்றார். குடிப்பேன் என்று அவர் சொன்னாலும் அவர் வெளியிடத்தில் குடித்ததாக யாரும் பார்க்கமுடியாது. அப்பா குடிப்பதை நிறுத்தி விட்டார். அப்பா என்ன செய்தாரோ அதை நாங்களும் செய்வோம். அப்பாவுடைய மொபைல் எண்ணை அனைத்து வைக்கமாட்டோம்.
எப்பொழுதும் நீங்கள் அந்த எண்ணிற்கு எங்களை அழைக்கலாம். எங்கள் அப்பா விட்டு சென்றதை நானும் என் தம்பியும் தொடர்வோம். அவரின் செல்போன் அனைத்து வைக்கப்படவில்லை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர் செய்த பணிகளை நாங்கள் தொடர்வோம். எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்வோம்.
தினமும் 4 மணி நேரம் தான் அப்பா தூங்குவார். பிறக்கு என்ன உதவி செய்யலாம் என யோசிப்பார். சில யூடூயூப் சேனல்கள் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதுபோல தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் " என மயில்சாமியின் மகன்கள் தெரிவித்தனர்.
- நடிகர் பிரசாந்த் தற்போது நடித்துள்ள படம் 'அந்தகன்'.
- இந்த படத்தின் இடம்பெற்றுள்ள கண்ணிலே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.

இந்நிலையில் அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலே வீடியோ பாடலை அறிவித்தபடி இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
- 'பஹீரா' திரைப்படம் வருகிறது மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதன்படி பஹீரா படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வருகிற மார்ச் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.
- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'.
- விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்து படக்குழுவினரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தனுஷ் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வாத்தி'.
- இப்படம் உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் ஆன ஒரு தல காதல தந்த பாடலின் தனுஷ் குரலின் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி
- மத நம்பிக்கை இல்லாதவர்களை குறித்து இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாகவும் இருந்தார். இவர் கேரளாவில் மகா சிவராத்திரியை யொட்டி நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது, மத நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போக வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவேன் என்று பேசினார். சுரேஷ் கோபியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆலப்புழாவை சேர்ந்த சுபாஷ் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதில் கேரளாவில் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காந்தாரா.
- ‘காந்தாரா’ 2-ம் பாகத்தில் ரஜினிகாந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கன்னட இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
கன்னடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம் 'காந்தாரா'. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

இதில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கி இருந்தார். 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ரிஷப் ஷெட்டி அறிவித்து உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் 'காந்தாரா' 2-ம் பாகத்தில் ரஜினிகாந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கன்னட இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. இந்த தகவலை ரசிகர்களும் "ஹிட் படத்தில் சூப்பர் ஸ்டார்'' என்ற தலைப்பில் வைரலாக்கி வருகிறார்கள். ஏற்கனவே 'காந்தாரா' படத்தை ரஜினிகாந்த் பார்த்து ரிஷப் ஷெட்டியை சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு நேரில் அழைத்து பாராட்டினார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்டியிடம் 'காந்தாரா 2' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரிஷப் ஷெட்டி சிரித்துவிட்டு பதில் எதுவும் செல்லாமல் சென்றுவிட்டார். 'காந்தாரா 2' படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
- ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
- பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், திஷா பதானி பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

அச்சம் என்பது இல்லையே படக்குழு
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
It's a wrap!!?? #AchchamEnbadhuIllayae
— ArunVijay (@arunvijayno1) February 23, 2023
Was a wonderful journey working with #DirectorVijay and his talented team. Thanks to @iamAmyJackson, #nimishasajayan, @silvastunt and all the others who worked hard to bring the director's huge vision to a grand reality! Can't wait!!??✌? pic.twitter.com/ZNEfrYffxf
- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சந்திரமுகி 2
தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராகவா லாரன்ஸ் பதிவு
சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ராகவா 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலுவை கட்டியணைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'முழுசா சந்திரமுகியா மாறிய வடிவேலு இழுத்து அணைக்கும் ராகவா லாரன்ஸ்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Mulusa Chandramukhiya maruna Vadivelu, iluthu aanaikum Ragava Lawrance ? @Vadiveluhere
— Raghava Lawrence (@offl_Lawrence) February 23, 2023
#funduringshoots#chandramuki2 pic.twitter.com/4G8alzzavt






