படப்பிடிப்பை நிறைவு செய்த அருண் விஜய்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அச்சம் என்பது இல்லையே
அச்சம் என்பது இல்லையே
Published on

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

அச்சம் என்பது இல்லையே படக்குழு

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com