என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படம் தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை வென்று வருகிறது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது.


    சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இரண்டு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அதாவது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 6-வது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (Hollywood Critics Association) விருது வழங்கும் விழாவில் சிறந்த சண்டைக்காட்சி மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கஸ்டடி படக்குழு

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கஸ்டடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை நடிகர் நாக சைதன்யா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    'கஸ்டடி' திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான்

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 'பதான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்துள்ளது.


    பதான் போஸ்டர்

    இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


    • நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ஜெயிலர்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    தமன்னா பதிவு

    இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு தள வீடியோவை நடிகை தமன்னா தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அன்னதானம் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவிப்பது, முதியோர்களுக்கு அன்னதானம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "ஜெயலலிதா இல்லாத இந்த சூழலில் அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதாபோல இன்னொரு பெண்மணியைப் பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை, எம்.ஜி.ஆருக்கு புரட்சித்தலைவர் என்கிற பட்டம் வந்தது. நடிகராக இருந்து ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக ஆனார்.

    அவர் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது அந்தக் கட்சியிலேயே மிக மிக அனுபவம் உள்ள தலைவர்கள் பலர் இருந்தும் ஒரு பெண் தனியாகப் பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி அதை இன்னும் பெரிய கட்சியாக மாற்றினார். இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் தலைவர்களும் அவரை மதித்தார்கள். அவருடைய திறமையைப் பார்த்துப் பிரமித்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் அவரை எதிர்த்து நான் பேசும் சூழல் ஏற்பட்டது. எனக்கும் அவருக்கும் ஒரு மனஸ்தாபம் வந்தது. பிறகு என்னுடைய மகள் கல்யாணத்திற்கு அழைக்கப்போனபோது அதையெல்லாம் மறந்து கல்யாணத்திற்கு வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தார். கருணை உள்ளம் கொண்டவர் ஜெயலலிதா" என்று பேசினார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    மிஸ்கின்

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் மிஸ்கின் இன்று முதல் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாடா’.
    • இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    டாடா

    டாடா


    இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.


    டாடா

    டாடா


    இந்நிலையில் டாடா படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தாயாக நான் என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர் சிம்பு.
    • இவரின் ‘பத்து தல’ திரைப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

    தற்போது இவர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாற்பது வயதை நெருங்கியும் சிம்புவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதற்கு முன்பு இவர் பல முன்னணி நடிகைகளுடன் பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.


    சிம்பு

    சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில், தற்போது சிம்புவிற்கு பெண் கிடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிம்புவிற்கு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை அவரது வீட்டார் பார்த்துள்ளதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் புது தகவல் ஒன்று சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்த செய்தி தொடர்பாக சிம்பு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் விளக்கமும் வெளியாகவில்லை.

    • ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.


    பதான் 

    பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், வசூல் சாதனையைத் தொடர்ந்து 'பதான்' படக்குழு அதிரடி முடிவெடுத்துள்ளது.


    பதான் போஸ்டர்

    அதாவது, இப்படத்தின் டிக்கெட் விலையை இன்று ஒரு நாள் மட்டும் ரூ.110 ஆக படக்குழு குறைத்துள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • நடிகர் நானி நடித்துள்ள திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.


    தசரா போஸ்டர்

    இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'தசரா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நானி இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • கோவிலுக்குள் கேமரா செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
    • காளஹஸ்தி சிவன் கோவிலின் மகிமையை வெளிப்படுத்தும் பிரபல பாடகி மங்கிலியை வைத்து பாடல் படமாக்கப்பட்டது.

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி கோவில் நாட்டிலேயே பிரசித்தி பெற்ற பரிகார சிவ ஸ்தலமாக விளங்கி வருகிறது. தோஷம் நீங்குவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிகாரம் செய்து வருகின்றனர். கோவிலுக்குள் கேமரா செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

    இந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோவிலின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தேவஸ்தானம் சார்பில் பிரபல பாடகி மங்கிலியை வைத்து பாடல் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.


    இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிவ பக்தர்கள் இந்த பாடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆகம விதிகளின்படி கோவிலுக்குள் கேமரா, செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தப் பாடல் காட்சியை நடராஜர் சாமி சிலை, அம்மன் சன்னதி, கால பைரவ சாமி ஸ்படிகல் லிங்கம், ராகு கேது பூஜை நடைபெறும் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

    கருவறையில் செல்வதற்கு அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் நவீன சிவன் சிலைகளை கொண்டு வந்து ஜல அபிஷேகம் செய்வது பூஜைகள் செய்வது படமாக்கப்பட்டுள்ளது.கேள்விக்குரியதாக உள்ளது. இந்த பாடலை படமாக்க தேவஸ்தான அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள். இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


    எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென பக்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுகள் மாறலாம், ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் மதம் சம்பந்த அமைப்புகள் தர்மம் மாறாமல் பாதுகாக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • லெஜண்ட் சரவணன் தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.


    லெஜண்ட் சரவணன்

    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.


    லெஜண்ட் சரவணன்

    இவர் காஷ்மீர் சென்றுள்ளதால் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது இவரின் பதிவு வைரலாகி வருகிறது. அதில், 'காத்திருப்பு நெருங்குகிறது. விரைவில் அப்டேட்கள் வெளியாகும்' என புகைப்படங்களை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இதனால் 'லியோ' படம் குறித்த அப்டேட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    ×