வசூலில் முன்னேறும் 'பதான்'.. கொண்டாடும் ரசிகர்கள்..

ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.
பதான்
பதான்
Published on: 

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

பதான்

பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 'பதான்' திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்துள்ளது.

பதான் போஸ்டர்

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com