என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் "இன் கார்".
- "இன் கார்" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் "இன் கார்". கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரித்துள்ளனர்.இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா வழங்குகிறார்.

மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை ரித்திகா சிங் பேசியதாவது, "இன் கார்" படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள், அவள் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்லுகிறாள், என்பதை நுணுக்கமாக இந்தப்படம் சொல்லும். இந்தப்படத்தில் நடித்த பிறகும் என்னால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வர முடியவில்லை. எனக்குள் பெரும் பாதிப்பை "இன் கார்" படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ஹர்ஷ் வர்தனுக்க்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் நன்றி என்றார்.
- நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க்தில் நாக சைதன்யா நடித்து வரும் படம் 'கஸ்டடி'. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் நாகசைதன்யா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து நாக சைதன்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'மேஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது எனது முகத்தில் மிகப்பெரிய ஆனந்தம். அவருடைய இசை என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நிறைந்திருக்கிறது. அதிகம் முறை அவரது இசையை மனதில் வைத்து நடித்துள்ளேன். தற்போது என்னுடைய கஸ்டடி படத்திற்கு இசையமைத்துள்ளார். உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என பதிவிட்டுள்ளார்.
- நடிகை அலியாபட் சமீபத்தில் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா மூலம் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷிகன்னா இது குறித்து சாடி உள்ளார்.
இந்தி நடிகை ஆலியாபட் சமீபத்தில் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று இருவர் கேமரா மூலம் ரகசியமாக படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது அலியாபட் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நடிகர்-நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதனை கண்டித்து வருகிறார்கள்.

தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராஷி கண்ணாவும் சாடி உள்ளார். இதுகுறித்து ராஷி கண்ணா கூறும்போது, "ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வாழ்க்கை உள்ளது. சில விஷயங்களை பகிரங்கப்படுத்த விரும்பமாட்டார்கள். அதை அனைவரும் கவுரவப்படுத்த வேண்டும். பிரபலங்களை பார்க்கும்போது அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

ஆலியாபட் போன்ற நடிகைகளை பார்த்தால் நிச்சயம் படங்கள் எடுத்துக்கொள்ள தோன்றும். அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடாது. எல்லை மீறினால் அது தாக்குதலுக்கு சமம் என்பது என் கருத்து. இப்படி நடந்தது அலியா பட்டுக்கா மற்றவருக்கா என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் யாராக இருந்தாலும் ஒன்றுதான். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது'' என்றார்.
- எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.
- ஒவ்வொரு வாரமும் என்னைப்பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் மூலம் பிரபலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங், தனது திருமணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் பேசுகிறார்கள். எப்போது திருமணம் நடந்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா? ஒவ்வொரு வாரமும் என்னைப்பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கூகுள் அலர்ட்ஸ் மூலம் அவை எனக்கு வந்து சேருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் என் திருமணம் நடந்து விட்டதாக தகவல் பரப்பினார்கள். அது எப்படி நடந்தது என்று அவர்களையே கேட்கவேண்டும் என நினைக்கிறேன். எதுவும் உண்மை இல்லை" என்றார். இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக ரகுல் பிரீத் சிங் கடந்த 2021-ல் அறிவித்தார். அப்போது இருந்தே இவர்கள் திருமணம் குறித்த தகவல் வலைத்தளத்தில் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்கள் ரகுல் பிரீத் சிங் கைவசம் உள்ளன.
- தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர் சிம்பு.
- இவர் இலங்கை பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.
தற்போது இவர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாற்பது வயதை நெருங்கியும் சிம்புவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதற்கு முன்பு இவர் பல முன்னணி நடிகைகளுடன் பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.

சிம்பு
சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் சிம்புவிற்கு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை அவரது வீட்டார் பார்த்துள்ளதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் புது தகவல் ஒன்று சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது.
இந்நிலையில், இந்த செய்திக்கு சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக பரவிய செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம் என்றும் அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் குறித்த தகவல் உறுதியானால் நாங்களே முதலில் ஊடகத்திடம் சொல்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நபர்களைச் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் போதை பழக்கமானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 70 சதவீதம் போதைப் பழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் 10 கோடி பேர் இதற்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முக்கிய நபர்களைச் சந்தித்து கையெழுத்து பெற்று வருகிறார்கள். இன்று ரஜினிகாந்த் அந்த கையெழுத்து இயக்கத்தில் தன் கையெழுத்தைப் பதிவு செய்தார்.
- நடிகர் துருவா சர்ஜா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மார்டின்’.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
இயக்குனர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் திரைப்படம் 'மார்டின்'. இப்படத்தில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நடிகர் அர்ஜுன் கதை எழுதியுள்ள இப்படத்தை வசாவி எண்டர்பிரைசஸ் (Vasavi Enterprises) சார்பில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா தயாரிக்கிறார். பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் கே மேத்தா, நடிகர் அர்ஜுன், இயக்குனர் ஏபி அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் டீசர் ஆக்ஷன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.
- இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.

மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

யாத்ரா - லிங்கா
இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவின் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் தின விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "எந்த சூரியனும்.. இந்த குழந்தைகளின் விளையாட்டு உற்சாகத்தை நிறுத்த முடியாது. காலை ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் ஓடுகிறார்கள். என் மகன்களின் பிரகாசத்தை கண்டு புன்னகைத்தபடி நான் நின்றுகொண்டிருக்கிறேன்" என புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
No amount of ☀️ sun..could stop these kids' spirit of sportsmanship fun..
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) February 25, 2023
They ran and tan in the morning ? sunshine..
While I stood there basking and smiling at my sons shine ✨ #sportsday #aboutlastmorning #sons ?? pic.twitter.com/WU6OBpHv3T
- ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பழனியம்மாள் நாச்சியார்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன். மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே. ஒரு முதலமைச்சரைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை. என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே. எல்லாத் துன்பங்களிலிருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக" என்று பதிவிட்டுள்ளார்.
உங்களைப் போலவே
— வைரமுத்து (@Vairamuthu) February 25, 2023
நானும் கலங்குகிறேன்
மூத்து முதிர்ந்து
உதிர்ந்தாலும்
தாய் தாய்தானே
ஒரு முதலமைச்சரைப்
பெற்றுக்கொடுத்தோம் என்ற
பெருமாட்டியின் பெருமை
மறைவதில்லை
என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே
எல்லாத்
துன்பங்களிலிருந்தும்
காலம் உங்களை
மீட்டெடுப்பதாகுக
- தனுஷ் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘வாத்தி’.
- இப்படம் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வாத்தி
இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

வாத்தி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Our beloved #Vaathi / #Sir has garnered unconditional love ❤️ & 75+ crores gross worldwide ?
— Sithara Entertainments (@SitharaEnts) February 25, 2023
Blockbuster Classes All Over! ?@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @iSumanth @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @7screenstudio @adityamusic pic.twitter.com/shZXZXBTiP
- ஆபாச படத்தில் நடிக்க கூறி பெண் இயக்குனர் மிரட்டியதாக வாலிபர் புகாரளித்துள்ளார்.
- இதையடுத்து அந்த பெண் டைரக்டர் லட்சுமி தீப்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் வெப் சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தருவதாக பெண் டைரக்டர் ஒருவர் கூறினார். அவரை நம்பி நானும் நடிக்க சென்றேன். இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டேன். அதன்பின்னர் படப்பிடிப்புக்கு வருமாறு என்னை அழைத்தனர்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த படப்பிடிப்புக்கு நானும் சென்றேன். அங்கு சென்ற பின்னர் தான் அவர்கள் எடுக்கும் படம் ஆபாச படம் என தெரியவந்தது. இதனால் நான் நடிக்க மாட்டேன் எனக்கூறினேன். இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள் என்னை மிரட்டினர். படத்தின் பெண் இயக்குனரும் படத்தில் நடிக்காவிட்டால் அதற்காக நான் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதன்காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதோடு என் குடும்பத்தினரும் என்னை ஒதுக்கிவிட்டனர். இதற்கு காரணமாக பெண் டைரக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுபோல இன்னொரு பெண்ணும், அதே பெண் டைரக்டர் மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து அந்த பெண் டைரக்டர் லட்சுமி தீப்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெண் டைரக்டர் லட்சுமி தீப்தாவை போலீசார் தேடி வந்த நிலையில் திருவனந்தபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்பு போலீசார் அவரை நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நெடுமங்காடு கோர்ட்டு டைரக்டர் லட்சுமி தீப்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
- கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
- இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம்
இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

துருவ நட்சத்திரம்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Started the Background score for @menongautham 's film #Dhruvanatchathiram. in Dolby 9.1.4 See you soon in theatres.
— Harris Jayaraj (@Jharrisjayaraj) February 25, 2023






