என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dhuruva sarja"

    • KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்"
    • படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசர் ஜூலை 11 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.

    • நடிகர் துருவா சர்ஜா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மார்டின்’.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

    இயக்குனர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் திரைப்படம் 'மார்டின்'. இப்படத்தில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    நடிகர் அர்ஜுன் கதை எழுதியுள்ள இப்படத்தை வசாவி எண்டர்பிரைசஸ் (Vasavi Enterprises) சார்பில் தயாரிப்பாளர் உதய் கே மேத்தா தயாரிக்கிறார். பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் கே மேத்தா, நடிகர் அர்ஜுன், இயக்குனர் ஏபி அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


    இப்படத்தின் டீசர் ஆக்ஷன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும் துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.




    ×