என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.


    தசரா

    இப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஓரி வாரி' பாடலின் தமிழ் வெர்ஷனான 'தீக்காரி' பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், தற்போது 'தீக்காரி' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகர் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இதைத்தொடர்ந்து இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    திருநள்ளாரில் சாமி தரிசனம் செய்த ஜெயம் ரவி

    இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
    • சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.


    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இப்படத்தின் மூலம் திரிஷா இணைந்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

     

    விஜய் - திரிஷா

    விஜய் - திரிஷா


    இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புகாக படக்குழு அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்று வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.



    இந்நிலையில் விஜய் - திரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. விமானத்தில் பணிப்பெண்ணுடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படததை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet).
    • இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ

    லியோ

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்

    பிறந்தநாள் கொண்டாடிய கவுதம் வாசுதேவ் மேனன்

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு இணையத்தில் பதிவிட்டுள்ளது. 

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    லியோ
    லியோ


    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இணைந்திருந்தார். இந்நிலையில் லியோ படத்தில் மிஷ்கினின் பகுதி முடிந்துவிட்டதாகவும் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை திரும்பிவிட்டதாகவும் மிஷ்கின் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

     

    மிஷ்கின் பதிவு

    மிஷ்கின் பதிவு


    அவர் பதிவிட்டிருப்பது, இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். அன்புடன் மிஷ்கின் என்று நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

    • இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
    • 'பஹீரா' திரைப்படம் வருகிறது மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.


    பஹீரா 

    பஹீரா 


    பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் 'பஹீரா' படத்தின் டிரைலரை அறிவித்தபடி படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த டிரைலரை திரைபிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

    • திரைப்பட இயக்குனரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவருமான ஆர்.கே.செல்வமணி சென்னை வடபழனியில் உள்ள ஃபெப்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • அப்போது திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு ஆபத்தான நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தயாரிப்பாளர்களிடமும், சின்னத்திரை தயாரிப்பாளர்களிடமும் கலந்துபேசியோ, வற்புறுத்தியோ, வேண்டுகோள் விடுத்தோ எங்கள் சம்பளத்தை ஓரளவு உயர்த்தி வருகிறோம்.


    திரைப்படத் துறையில் சாதாரண தொழிலாளர்கள் சம்பளம் இன்று ரூ. 1000/- தொடுவதற்கு 100 ஆண்டுகள் கடக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திரைப்படத் துறைக்கு செய்யும் உதவிகள் மேலோட்டமாகவே நின்று விடுகின்றன. அஸ்திவாரமான தொழிலாளர்களை அவை சென்றடைவதில்லை. இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை. ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரியும்போது இறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது. ஆனால் சிரமப்பட்டு திரைப்படம் தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியும்போது விபத்து ஏறபட்டால் அவர்களை காப்பாற்ற எந்த நாதியுமில்லை. 


    எனவே, திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 




    வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில், 'ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.




    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கு பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இபடத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓ.டி.டி. தளத்திலும் வெளியாகி உள்ளது.
    • இந்த படத்துக்கு தனது 'ஏலே' பட காட்சிகளை திருடி இருப்பதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றம் சாட்டி உள்ளார்.

    மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓ.டி.டி. தளத்திலும் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தனது 'ஏலே' பட காட்சிகளை திருடி இருப்பதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றம் சாட்டி உள்ளார். 



    இவர் தமிழில் சில்லுக்கருப்பட்டி, பூவரசம் பீப்பி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். ஏலே படத்தில் சமுத்திரக்கனி நடித்து இருந்தார். ஹலிதா ஷமீம் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், "ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அதில் அவர்களையும் நடிக்க வைத்தோம். அதே கிராமத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும் நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இப்படம் முழுக்க களவாடப்பட்டு உள்ளது. 



    ஐஸ்காரர் என்றால் இங்கே பால்காரர். செம்புலி இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. ஏலே படத்தில் நடித்த கலைக்குழு பாடகர் பாத்திரம் போலவே, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன. நான் தேர்வு செய்த அழகியல் இரக்கமின்றி திருடப்படும்போது அமைதியாக இருக்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சமந்தா திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகளை கடந்துள்ளார்
    • இது குறித்து சமந்தா சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர். 

    சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். சமந்தா நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவந்த 'குஷி' படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. 

    சமந்தா சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது 13 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. இந்நிலையில் சமந்தா தன்னுடைய 13 ஆண்டுகால திரைப்பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த அன்பை நான் உணர்கிறேன்... இதுதான் என்னை தொடர வைக்கிறது... இப்போதும் என்றும், நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால் தான். 13 ஆண்டுகள், நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மனு ஜேம்ஸ்.
    • தற்போது நான்சி ராணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மனு ஜேம்ஸ், தற்போது நான்சி ராணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இவர் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.


    மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதாகும் மனு ஜேம்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×