இணையத்தை கலக்கும் பிரபுதேவாவின் 'பஹீரா' பட டிரைலர்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.'பஹீரா' திரைப்படம் வருகிறது மார்ச் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.
பஹீரா 
பஹீரா 
Published on

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

பஹீரா 
பஹீரா 

பஹீரா 

பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 'பஹீரா' படத்தின் டிரைலரை அறிவித்தபடி படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த டிரைலரை திரைபிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com