என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • தற்போது நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த நடிகர் பிரபு, மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.


    பிரபு 

    பிரபு 

    கடந்தாண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், நானே வருவேன், வாரிசு போன்ற படங்களில் பிரபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
    • தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.


    கீர்த்தி சுரேஷ்

    தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.


    • இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
    • இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.


    பஹீரா

    பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


    பஹீரா போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது டிரைலரை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பஹீரா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான 'குச் குச் ஹோத்தா ஹை' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்தியன் 2

    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


    இந்தியன் 2

    இந்நிலையில், இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு 7 வில்லன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • சமீபத்தில் இப்படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


    பிச்சைக்காரன் 2

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது.


    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


    புஷ்பா

    இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதன்படி, 'புஷ்பா-தி ரூல்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    • நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அகிலன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    அகிலன்

    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'துரோகம்' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    அகிலன்

    அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சாம் சி.எஸ், சிவம் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • நடிகை மஞ்சு வாரியர் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் சமீபத்தில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


    அஜித் - மஞ்சுவாரியர்

    போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு பைக் வாங்கிய நடிகை மஞ்சு வாரியர் 'என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி அஜித் சார்' என்று பதிவிட்டிருந்தார்.


    மஞ்சு வாரியர்

    இந்நிலையில், தற்போது இவரின் சமூக வலைதளப்பதிவு வைரலாகி வருகிறது. அதில், சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'சேலை என்பது வெறும் ஆடையல்ல. அது ஒரு மொழி' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.


    • 'மாமனிதன்' திரைப்படம் தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.
    • இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.


    யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதினை பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்காவில் நடைபெற்ற 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார்.
    • இவரின் படங்கள் தோல்வி அடையாததற்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார், கேத்ரீனா கைப் நடித்த 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான 'ரக்ஷா பந்தன்', 'சாம்ராட் பிரித்விராஜ்' ஆகிய படங்கள் வசூலில் பின்தங்கியது. 'ராம்சேது' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் பட்ஜெட்டை விட குறைவான வசூலையே பெற்றது.


    அக்ஷய் குமார்

    அக்ஷய் குமார்

    அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் 'செல்பி' திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் நாளில் ரூ.2.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனது படங்களின் தொடர் தோல்வி குறித்து அக்ஷய் குமார் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது, "இப்படி நடப்பது எனக்கு முதன்முறையல்ல. என்னுடைய திரைப்பயணத்தில் ஒரே நேரத்தில் 16 தோல்விப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஒரு காலத்தில் 8 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன.


    அக்ஷய் குமார்

    அக்ஷய் குமார்

    படங்கள் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம். எனது தவறு தான் காரணம். பார்வையாளர்கள் மாறிவிட்டனர். நானும் மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாம் நம்மை மாற்றியாகவேண்டும். மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் வழக்கமானதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்கிறார்கள். தொடர்ந்து படங்கள் தோல்வியடைகிறது என்றால் நாம் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான அலராம் தான் அது. நான் மாற முயல்கிறேன். இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது அதுதான். படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல. காரணம் எனது விருப்பத்தேர்வு தான். ஒருவேளை எனது படங்களில் சரியான அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்." இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் வடிவேலு 

    இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடிக்கிறார். பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இந்நிலையில், நடிகர் வடிவேலுவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    அதாவது, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

    • நாளைய இயக்குனர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்றவர் பிரகாஷ். என்.
    • இவர் தற்போது குடிமகான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    நாளைய இயக்குனர் சீசன் 6-ல் 'குட்டி தாதா' என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். என் இயக்கியிருக்கும் படம் குடிமகான். இப்படத்தை சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரகாஷ். என் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

    விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நாளைய இயக்குனர்கள் சீசன்-6ல் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஜ் மேனன் இசையமைக்க ஷிபு நீல்.பிஆர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.


    குடிமகான்
    குடிமகான்

    இந்நிலையில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசும்போது, "தண்ணி, தம் அடிக்காத டீ-டோட்டலர் என்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்கே அறிவுரை சொல்ல நினைத்தேன். ஆனால் டிரைலரில் அதை சரியாக சொல்லியிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம். நான் அப்படித்தான் இவற்றில் இருந்து ஒதுங்கினேன்.

    இதுபற்றி சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்டபோது கூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்த கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டது தான் வேடிக்கை. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களைவிட இன்னும் கொஞ்சம் மேலானவர்கள் தான். சொல்லப்போனால் பெண்கள் தெய்வத்திற்கு சமம்" என்று கூறினார்.

    ×