என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.
- இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பத்து தல
கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

பத்து தல
இதையடுத்து இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, " வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கவுதம் மேனன் சிறிய மாற்றம் செய்ததால் 'பத்து தல' லுக்கில் தான் சிம்பு அப்படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. இது எனக்கு சிறிது வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால்,'வெந்து தணிந்தது காடு' படத்தில் 'பத்துதல' தோற்றத்தை ரசிகர்கள் கவனித்து ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியே' என தெரிவித்துள்ளார்.
- நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சுனில்
இந்நிலையில் தெலுங்கு நடிகர் சுனிலின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் இருந்து அவருடைய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.
Team #Jailer wishes the versatile actor #Sunil a very Happy Birthday! #HBDSunil #HappyBirthdaySunil pic.twitter.com/71QluUHKeA
— Sun Pictures (@sunpictures) February 28, 2023
- ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு படங்களிலும் நடித்துள்ளவர் மாரிமுத்து.
- சமூக வலைத்தளத்தில் மாரிமுத்து போன்று பதிவிட்டிருப்பது பேசு பொருளாகியது.
இயக்குனர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட படத்திலும் வேலை மாரிமுத்து செய்திருக்கிறார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடிப்பில் புலிவால், உள்பட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவா, பரியேறும் பெருமாள், கொம்பன் என பல்வேறு படங்களிலும் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் 18+ கண்டெண்ட்டுகளை போடும் கணக்கு ஒன்றிலிருந்து, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு "Can I call you" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய கணக்கில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரிப்ளையில் "yes" என பதிலளித்து மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நம்பர் ட்ரூ காலரில் தேடிப்பார்த்து அது அவரது நம்பர் என உறுதியானதால் ரசிகர்கள் பலரும் அதிரிக்குள்ளானர்.

இந்நிலையில், இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில், கமெண்ட் செய்திருப்பது எனது தந்தையின் அக்கவுண்ட் கிடையாது. அவரின் போன் நம்பர் பெரும்பாலானோருக்கு தெரியும். அதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த விளக்கத்துக்கு பின்னர் அந்த போலி பதிவு நீக்கப்பட்டுள்ளது.
- மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:-
எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்.
இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
- நடிகர் ரன்பீர் கபூர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இதைத்தொடர்ந்து ரன்பீர் கபூர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரன்பீர் கபூர்
இதையடுத்து நடிகர் ரன்பீர் கபூர் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கங்குலியை, ரன்பீர் கபூர் சந்தித்து பேசியதை வைத்து இந்த செய்தியை உறுதிப்படுத்தி பல தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூரிடம், கங்குலி வாழ்க்கை படம் குறித்து கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, "கங்குலி இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் லெஜண்ட். அவரை பற்றிய வாழ்க்கை படம் எடுக்கப்படுவது மிகவும் சிறப்பானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான் இந்த படத்தில் இடம்பெறவில்லை. எனக்காக காதல் கதைகளை தான் இயக்குனர்கள் எழுதி வருகிறார்கள் என நினைக்கிறேன்'' என்று கூறினார்.
- இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ’பகாசூரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
- இப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தை அடுத்து தனது அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

ரிச்சர்ட் ரிஷி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவரு யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்..." என்று பதிவிட்டுள்ளார்.
- தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா.
- தற்போது நந்திதா ஸ்வேதா பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலடைந்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவரது கதாப்பாத்திரம் இன்றளவும் ரசிகர்ளின் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. குமுதாவாக நடித்திருந்த நந்திதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

நந்திதா ஸ்வேதா
இந்நிலையில் நந்திதா ஸ்வேதா பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரின் லைக்குகளை குவித்து வருகிறது. இந்த கவர்ச்சி புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
It's all Glitz & Glam pic.twitter.com/o6Eio8mhLC
— Nanditaswetha (@Nanditasweta) February 28, 2023
- இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் ‘தசரா’.
- இப்படத்தில் நடித்திருக்கும் இணை நடிகரை நடிகர் நானி அறிமுகப்படுத்தியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தசரா
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நானி
இந்நிலையில் நடிகர் நானி இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கும் இணை நடிகரின் புகைப்படத்தை வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் நானி கையில் ஒரு சிறிய கோழி குட்டியை வைத்திருக்கிறார். இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்திருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
My costar :)#Dasara pic.twitter.com/F39m3zAHxi
— Nani (@NameisNani) February 28, 2023
- சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதல் செய்து வருவதாக கிசுகிசு பரவி வந்தது.
- தற்போது இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்தார்த்-அதிதி ராவ்
சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. அதிதிராவ் பிறந்த நாளையொட்டி "இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டு சித்தார்த் வாழ்த்து தெரிவித்திருந்தது இவர்களின் காதலை உறுதிப் படுத்துவதாக பலரும் பதிவிட்டு வந்தனர்.

சித்தார்த்-அதிதி ராவ்
இந்நிலையில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள இசையை ரசிகர் ஒருவர் பழைய நோக்கிய 1100 செல்போனில் தத்ரூபமாக இசையமைத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- தற்போது நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த நடிகர் பிரபு, மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

பிரபு
கடந்தாண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், நானே வருவேன், வாரிசு போன்ற படங்களில் பிரபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
- தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.

கீர்த்தி சுரேஷ்
தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 27, 2023






