

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தை அடுத்து தனது அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.
ரிச்சர்ட் ரிஷி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவரு யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம், முக்கியமான செய்தி... என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான். அறிவிப்பு விரைவில்..." என்று பதிவிட்டுள்ளார்.