சேலை என்பது வெறும் ஆடையல்ல ஒரு மொழி - நடிகை மஞ்சுவாரியர்

நடிகை மஞ்சு வாரியர் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்
Published on

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் சமீபத்தில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அஜித் - மஞ்சுவாரியர்

போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு பைக் வாங்கிய நடிகை மஞ்சு வாரியர் 'என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்கு நன்றி அஜித் சார்' என்று பதிவிட்டிருந்தார்.

மஞ்சு வாரியர்

இந்நிலையில், தற்போது இவரின் சமூக வலைதளப்பதிவு வைரலாகி வருகிறது. அதில், சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'சேலை என்பது வெறும் ஆடையல்ல. அது ஒரு மொழி' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com