விரைவில் வெளியாகும் அப்டேட்ஸ்.. வைரலாகும் லெஜண்ட் சரவணன் டுவீட்

லெஜண்ட் சரவணன் தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது.
லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன்
Published on

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

லெஜண்ட் சரவணன்

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

லெஜண்ட் சரவணன்

இவர் காஷ்மீர் சென்றுள்ளதால் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது இவரின் பதிவு வைரலாகி வருகிறது. அதில், 'காத்திருப்பு நெருங்குகிறது. விரைவில் அப்டேட்கள் வெளியாகும்' என புகைப்படங்களை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். இதனால் 'லியோ' படம் குறித்த அப்டேட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com