என் மலர்
நீங்கள் தேடியது "dhanush"
- ’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா
'வாத்தி' திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மிரட்டலாக வந்திருக்கும் இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதையடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ், எனக்கு தெலுங்கு அவ்வளவா பேச வராது புரியும். நீங்க என் பக்கத்து ஸ்டேட் தான இங்கிலீஸ்ல எதுக்கு பேசனும் தமிழ்ல பேசுறேன் புரியும்ல என்று கேட்டதற்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா
சிறிது நேரம் தமிழில் பேசிய பின்னர் ரசிகர்கள் சிலர் புரியவில்லை என்று கூறியதால் ஆங்கிலத்தில் தனுஷ் பேசினார். இறுதியாக தனுஷ் பேசி முடிக்கும் போது ரசிகர்கள் அவரை விஐபி படத்திலிருந்து அமுல் பேபி வசனத்தை பேச சொல்ல அதற்கு தமிழில் தான் வரும் என்று கூறிவிட்டு அந்த வசனத்தை பேசினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தனுஷ் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'வாத்தி'.
- இப்படம் உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தனர்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.51 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் ஆன ஒரு தல காதல தந்த பாடலின் தனுஷ் குரலின் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
- 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார்.

மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.

இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் தனுஷ் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






