படப்பிடிப்பு தளத்தில் சமையல் செய்த அருண் விஜய்.. வைரலாகும் வீடியோ..

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

அருண் விஜய் பதிவு

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் படப்பிடிப்பு தளத்தில் சமையல் செய்துள்ளார். அதாவது, 'அச்சம் என்பது இல்லையே' படப்பிடிப்பு தளத்தில் தனக்கான உணவை அருண் விஜய்யை சமைக்கும் வீடியோவை அவர் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com