கம்பேக் கொடுத்த ஷாருக்கான்.. பிரபல படங்களுடன் கிளப்பில் இணைந்த பதான்..

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பதான்’.இப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
ஷாருக்கான்
ஷாருக்கான்
Published on

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

பதான்

பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், 'பதான்' படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

பதான்

அதாவது, அமீர்கான் நடித்த 'டங்கல்' திரைப்படம் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1968 கோடியும் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1810 கோடி வசூலையும் அதேபோல் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த 2022- ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1200 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

பதான்

மேலும் யஷ் நடித்த 'கேஜிஎப் 2'திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1250 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் தற்போது 'பதான்' திரைப்படம் ஐந்தாவதாக இணைந்துள்ளது. இதையடுத்து அடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் இனி அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com