துணிவு படத்தின் சில்லா சில்லா வீடியோ பாடல் வெளியீடு

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘துணிவு’.இப்படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
துணிவு
துணிவு
Published on

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துணிவு
துணிவு

துணிவு

போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டினர். 'துணிவு' திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சில்லா சில்லா பாடல்
சில்லா சில்லா பாடல்

சில்லா சில்லா பாடல்

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று பலரின் கவனத்தை ஈர்த்த சில்லா சில்லா பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com