மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மயில்சாமி - ரஜினிகாந்த்
மயில்சாமி - ரஜினிகாந்த்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி
மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி

மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

சற்று நேரத்தில் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com