உலகம் சுற்றும் வாலிபனாக உலா வரும் அஜித்.. தீயாய் பரவும் வீடியோ..

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.
உலகம் சுற்றும் வாலிபனாக உலா வரும் அஜித்.. தீயாய் பரவும் வீடியோ..
Published on

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

சமூக வலைதளத்தில் பரவும் அஜித் வீடியோ

இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.

இந்நிலையில், 'துணிவு' படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஸ்காட்லாந்தில் கார் ஓட்டிச்செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com