புதிய போஸ்டரை வெளியிட்ட 'சொப்பன சுந்தரி' படக்குழு

எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சொப்பன சுந்தரி
சொப்பன சுந்தரி
Published on

லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது.

சொப்பன சுந்தரி

டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சொப்பன சுந்தரி' படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com