'வாரிசு' படக்குழுவின் சூப்பர் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘வாரிசு’.இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூல் செய்துள்ளது.
வாரிசு
வாரிசு
Published on

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வாரிசு போஸ்டர்

இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com