அரசியல்வாதியை கரம் பிடித்த தனுஷ் பட நடிகை

இந்தி திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர்.இவர் தனது நண்பரும் அரசியல்வாதியுமான பகத் அகமதுவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
சுவரா பாஸ்கர் -பகத் அகமத்
சுவரா பாஸ்கர் -பகத் அகமத்
Published on

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுவரா பாஸ்கர். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ராஞ்சனா', மாதவன் நடிப்பில் 'தனு வெட்ஸ் மனு' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி நீதிமன்ற வழக்குகளை சந்தித்துள்ளார்.

சுவரா பாஸ்கர் -பகத் அகமத்

இந்நிலையில், சுவரா பாஸ்கர் தனது நண்பரும் அரசியல்வாதியுமான பகத் அகமதுவை திடீர் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்துள்ள இந்த திருமணத்தை சுவரா பாஸ்கர் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். பகத் அகமதுவுடன் ஏற்பட்ட அறிமுகத்தில் இருந்து திருமணமானதுவரை உள்ள பயணத்தை சிறிய வீடியோ மூலம் பகிர்ந்து இருக்கிறார்.

சுவரா பாஸ்கர் -பகத் அகமத்

முதலில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலில் முடிந்தது. இந்தப்பயணத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். என் இதயத்துக்குள் பகத்தை வரவேற்கிறேன் என்ற பதிவையும் வெளியிட்டு உள்ளார். பகத் அகமது சமாஜ்வாடி கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com