ஜீவி பட நாயகனின் அடுத்த படம்.. வைரலாகும் போஸ்டர்

8 தொட்டாக்கள், ஜீவி, c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் வெற்றி.இவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெற்றி
வெற்றி
Published on

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தொட்டாக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெற்றி. இப்படத்தை தொடர்ந்து ஜீவி படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச பட விழாக்களிலும் விருதுகள் கிடைத்தன. அதன்பின்னர் c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இரவு
இரவு

இந்நிலையில் வெற்றி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரவு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கவுள்ளார். மேலும் இதில் சந்தான பாரதி, மன்சூர் அலிகான், பொன்னம்பலம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com