என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘குஷி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    குஷி படப்பிடிப்பில் இணைந்த சமந்தா

    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    குஷி படப்பிடிப்பில் இணைந்த சமந்தா

    அதன்படி, 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா மீண்டும் இணைந்துள்ளார். இதனை இயக்குனர் ஷிவா நிர்வாணா தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல் பாலாஜி.
    • இவர் தற்போது தனது அம்மாவின் ஆசைக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

    காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல் பாலாஜி. வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வரும் டேனியல் பாலாஜி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான அரியவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

     

    டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்

    டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்


    இந்நிலையில் டேனியல் பாலாஜி சென்னைக்கு அருகிலுள்ள ஆவடி பகுதியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி இன்று கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இந்த விழாவிற்கு பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனர். தனது அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயில் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் இன்று பழனி கோவிலுக்கு வந்தார்.
    • அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன், காமெடி நடிகர் சந்தானம் உள்பட ஏராளமானோர் தொடர்ந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    அதன் வரிசையில் இன்று நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் பழனி கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தும் அவர்கள் வழிபட்டனர். பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர்.

    • நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
    • மும்பையில் சமீப நாட்களில் சுமார் 80 பேர் கே.ஒய்.சி. மோசடியில் பணத்தை இழந்திருப்பதும், இதில் நடிகை நக்மாவும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நக்மா. 48 வயதான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த 'லிங்'கை நடிகை நக்மா 'கிளிக்' செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.

    அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் கே.ஒய்.சி. (வாடிக்கையாளரின் விவரம்) புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 998 அபேஸ் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுபற்றி நடிகை நக்மா கூறுகையில், "லிங்கில் கேட்கப்பட்டு இருந்த விவரங்களை நான் பகிரவில்லை. இருப்பினும் எதிர்முனையில் பேசிய நபர், கே.ஒய்.சி.யை புதுப்பித்து தருவதாக கூறி, எனது இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளார். நல்ல வேளையாக நான் பெரும் தொகையை இழக்கவில்லை" என்றார்.

    மும்பையில் சமீப நாட்களில் சுமார் 80 பேர் கே.ஒய்.சி. மோசடியில் பணத்தை இழந்திருப்பதும், இதில் நடிகை நக்மாவும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்துள்ளார்.


    ரிஷப் ஷெட்டி - பசவராஜ் பொம்மை

    இது தொடர்பாக பசவராஜ் பொம்மை தனது சமூக வலைதளத்தில், "கன்னடத்தின் பெருமைக்குரிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் மூலம் நமது மண்ணின் கலாச்சாரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், வனவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை நம் முன் வைத்தவர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்க்க அரசு ஆர்வமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி 3மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

    "டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.


    மாவீரன்

    இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் சமீபத்தில் வெளியானது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.


    மாவீரன்

    இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    விடுதலை

    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    விடுதலை

    இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று ( மார்ச் 8) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
    • இவர்கள் வாடகை தாய் மூலம் சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

    தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் நடித்த 'கனெக்ட்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.


     குழந்தைகளுடன் விமான நிலையத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தங்களது இரட்டை குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உலகம் மற்றும் உயிர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • இயக்குனர் இகோர் இயக்கத்தில் ஹன்சிகா புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.


    ஹன்சிகா

    சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஹன்சிகா தற்போது இயக்குனர் இகோர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.


    மேன் போஸ்டர்

    'ஹன்சிகா 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி, 'மேன்' (Man) என இப்படத்திற்கு படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


    • நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை இவர் தயாரித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாம் திரைக்கதை, இயக்கம் , பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தன் தேர்ந்த நடிப்பால் மக்கள் மனதில் நீக்கா இடம் பிடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்கி வருகிறார்.


    கமல்ஹாசன்

    இந்த நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் பல படங்களை தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 56-வது படத்தின் அப்டேட் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.


    மார்க் ஆண்டனி

    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.


    மார்க் ஆண்டனி

    இதையடுத்து மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனர் செல்வராகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    தசரா

    இதையடுத்து இப்படத்தின் மூன்றாவது பாடலான 'மைனரு வேட்டிக்கட்டி' பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    ×