என் மலர்
சினிமா செய்திகள்
- ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

ஆர்.ஆர்.ஆர்.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்றது. சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் பரிந்துரைக்கப்பட்டது.

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். அமெரிக்கா சென்றுள்ளார். இங்கு ரசிகர் ஒருவர் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது "போட்டோ எடுத்துட்டு போ பா" என fun ஆக அந்த ரசிகரை அழைத்து நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா.
- இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் தம்பியாக 'வீரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் நடிகர் பாலா. தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்தில் கலாபம் தொடங்கி பிக் பி, ஹிட் லிஸ்ட், புலி முருகன், லூசிபர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பாலா
இதையடுத்து நடிகர் பாலாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கல்லீரலில் பிரச்சினை இருப்பதாகவும் இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலாவின் தாய் மற்றும் மனைவி எலிசபெத் அவரை உடனிருந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
- உலம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான காளி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

வைரமுத்து
இன்று உலகம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் மகளிர் தினத்திற்கு வைரமுத்து கவிதையின் வாயிலாக வாழ்த்து கூறியுள்ளார். அதில், மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள் வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும். உலக மகளிர் திருநாள் வாழ்த்து என்று பதிவிட்டுள்ளார்.
மாலையும் நகையும்
— வைரமுத்து (@Vairamuthu) March 8, 2023
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்
உலக
மகளிர் திருநாள் வாழ்த்து#மகளிர்தினம் | #WomensDay
- பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் அனுசரிக்கும் விதமாக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
- மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் திரைப்பிரபலங்களும் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பெண்களின் வளர்ச்சியையும் சாதனைகளையும் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள்.
ஏர் முனை தொடங்கி போர் முனை வரையிலும் பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலவைர்களும் திரைப்பிரபலங்களும் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.
பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து.
— Kamal Haasan (@ikamalhaasan) March 8, 2023
- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
- இப்படத்தின்படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சந்திரமுகி 2 படக்குழு
'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஹோலி பண்டிகையை படக்குழுவுடன் கலர் அடித்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.
- இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

சார்பட்டா பரம்பரை
1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.

சார்பட்டா பரம்பரை - 2
மேலும், சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து பல மீம்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

சார்பட்டா பரம்பரை
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி சார்பட்டா பரம்பரை முதல் பாகத்தின் முன் பகுதியாக (PreQuel) இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக பா.இரஞ்சித் தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், 1925-களில் நடந்த பென்னி மில் கலவரம் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய கதையை எழுதி முடித்ததாக தெரிவித்திருந்தார்.
இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து சார்பட்டா பரம்பரை 2, இந்த கதைகளத்தை மைய்யப்படுத்தி அமையும் என்று நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
- சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- தற்போது செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

செல்வராகவன்
இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது செல்வராகவன் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராவன் நடிக்கிறார்.

செல்வராகவன்
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!! அனுபவம். தத்துவம் அல்ல!! என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!!
— selvaraghavan (@selvaraghavan) March 8, 2023
அனுபவம். தத்துவம் அல்ல !!
- உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் போட்டியிட்டார்.
- அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் பிரதிநிதிகள் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா காந்தியை சந்திக்க அர்ச்சனா கவுதம் அவரது உதவியாளரான சந்தீப் சிங்கிடம் பேசி உள்ளார்.

பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்
ஆனால் அர்ச்சனாவை, பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த சந்தீப் சிங் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அர்ச்சனாவை, சந்தீப் சிங் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அநாகரீக வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அர்ச்சனா புகார் கூறினார். இது தொடர்பாக அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 'பிஸ்கோத்', 'காசேதான் கடவுளடா' ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் 'பார்வை'.
- இதில் 'அயலி' இணையத் தொடர் மூலம் பிரபலமடைந்த அபி நட்சத்திரா நடித்துள்ளார்.
'பிஸ்கோத்', 'காசேதான் கடவுளடா' ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் 'பார்வை'. இந்த பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுத, பாடகி எம். எம். மானஸி மற்றும் பாடகர் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர். 'அயலி' இணையத் தொடர் மூலம் பிரபலமான நடிகை அபி நட்சத்திரா நடிப்பில் இந்த தனிப்பாடல் உருவாகியுள்ளது.

அபி நட்சத்திரா
இந்தப் பாடலுக்கான காணொளியை பிரசாந்த் ராமன் இயக்கியிருக்கிறார். ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த ஆல்பத்தை தரணி பால்ராஜ் தொகுத்திருக்கிறார். இதனை துர்ம் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் தயாரிப்பாளர் தம்பிதுரை மாரியப்பன் தயாரித்திருக்கிறார்.

அபி நட்சத்திரா
பெண்கள் தினசரி தங்களது நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், பெண்கள் மீதான ஆண்களின் தவறான பார்வையை மையப்படுத்தியும் இந்த பாடல் உருவாகியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 'பார்வை' எனும் தனிப்பாடலை இணையத்தில் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

புஷ்பா
இந்நிலையில் புஷ்பா-தி ரூல் படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் புஷ்பா-தி ரூல் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- 2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வித்யா பாலன்.
- சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் வித்யா பாலன் மிகவும் பிரபலமடைந்தார்.
2005-ஆம் ஆண்டு வெளியான 'பிரினீதா' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வித்யா பாலன். 'பா', 'கஹானி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

வித்யா பாலன்
டபூ ரத்னானியின் வருடாந்திர பிரபல போட்டோஷூட்டுக்காக வித்யாபாலன் கொடுத்து உள்ள போஸ் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது. ஒரு கையில் செய்தித்தாள் மற்றும் மறு கையில் காபி கோப்பையுடன் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து உள்ளார். ஹீல்ஸ் மற்றும் சன்கிளாஸ் அணிந்து, செய்தித்தாளின் பின்னால் ஆடையின்றி இருப்பது போல் அந்த புகைப்படம் இருக்கிறது. ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூர் வரை டபூ ரத்னானி போட்டோஷூட் செய்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானவர் நவாசுதீன் சித்திக்.
- இவருடைய முன்னாள் மனைவி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தியில் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார். நவாசுதீன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதாகவும் அவரது முன்னாள் மனைவி அலியா குற்றம் சாட்டி இருந்தார். போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

நவாசுதீன் சித்திக்
இதுகுறித்து நவாசுதீன் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் அமைதியாக இருப்பதால் கெட்டவனாக பார்க்கிறார்கள். நானும், அலியாவும் ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டோம். குழந்தைகளுக்காக எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது. எனது குழந்தைகளை 45 நாட்களாக பள்ளிக்கு அனுப்பவில்லை. பணத்துக்காக பிள்ளைகளை அலியா துபாயில் இருந்து இந்தியா அழைத்து வந்து இருக்கிறார். குழந்தைகள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர். அலியாவுக்கு மாதம் ரூ.10 லட்சம் கொடுத்து வருகிறேன்.
கல்வி, மருத்துவம் உள்பட அனைத்து செலவுகளையும் கவனிக்கிறேன். துபாய் செல்வதற்கு முன்பு மாதம் ரூ.5 முதல் 7 லட்சம் வரை கொடுத்தேன். சொகுசு கார்கள் வாங்கி கொடுத்தேன். அவற்றை விற்று விட்டார். துபாயில் அலியா தங்கி உள்ள வீட்டுக்கு வாடகை கொடுக்கிறேன். அலியாவுக்கு பணம்தான் முக்கியம். பணம் பறிக்க என்மீது வழக்குகளை போட்டு இருக்கிறார். என்னை மிரட்டுகிறார். சட்டத்தை நம்புகிறேன். வழக்குகளில் வெல்வேன்'' என்று கூறியுள்ளார்.






