என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது.
    • இவர் தற்போது வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஹைதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.


    அமிதாப் பச்சன்

    இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஹைதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த பின்னர் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.

    இந்த விவரங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, "மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார். இவர் நலமடைய வேண்டும் என ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


    அமிதாப் பச்சன்

    இந்நிலையில், தற்போது அமிதாப் பச்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களின் அக்கறைக்கும், அன்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பிரார்த்தனை மூலம் நான் குணமடைந்து வருகிறேன். அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் இகோர் இயக்கத்தில் ஹன்சிகா புதிய படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.


    ஹன்சிகா

    சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஹன்சிகா தற்போது இயக்குனர் இகோர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.


    ஹன்சிகா

    'ஹன்சிகா 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ஹன்சிகா போஸ்டர்

    அதன்படி, 'ஹன்சிகா 51' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஹன்சிகா தனது இணையப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    • சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
    • பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

    தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர், தி டீச்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    அமலா பால்

    இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில், நடிகை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான உடையில் நடனமாடும் வீடியோ பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவில் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'.
    • இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    டாடா போஸ்டர்

    இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் படக்குழுவிற்கு தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டாடா' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


    • நடிகர் சிம்பு தற்போது ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • தற்போது சிம்பு தனது 48-வது படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பத்து தல

    இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிம்புவின் 'எஸ்.டி.ஆர்.48' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


    பத்து தல

    அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு "காட்டு பசியில் இருக்கிறேன். அதனை தணிக்க நானே ஒரு படத்தை இயக்கி நடிக்க வேண்டியிருக்கும். முன்னாடி இந்த மாதிரி நேரத்தில் 'மன்மதன்' திரைப்படத்தை எடுத்தேன்" என்ற ஒரு பகுதியை மேற்கொள் காட்டி 'எஸ்.டி.ஆர்.48' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். இதற்கு மரண வெயிட்டிங் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.


    ஜெயிலர்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலானது. அதில், இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.


    இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பதிவு

    மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது, 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இயக்குனர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை நெல்சன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.


    அகிலன்

    இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், துறைமுகத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் பல சவால்களைச் சந்தித்திருப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். அகிலன் நிறையக் கஷ்டப்பட்ட படம், இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்தபோது, தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது. பாபி மாஸ்டரை பேராண்மையில் இருந்து தெரியும். இயக்குனருடன் இணைந்து பயணித்துள்ளார்.


    அகிலன்

    பிரியா தமிழ் பேசி நடிக்கும் கதாநாயகி, ஒவ்வொரு படத்திலும் மெருகேறிக்கொண்டே போகிறார், தயாரிப்பாளர் சுந்தர் சார் சகோதரர் மாதிரி தான், நிறையப் படங்கள் சேர்ந்து பயணிக்கப் போகிறோம் சார். இயக்குனர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விசயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்குப் பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும். இந்தப்படம் நல்லா வந்ததற்குக் காரணம் அவருடைய டீம் தான்" என்று கூறியுள்ளார்.

    • என்னை மாதிரியான நடிகர்கள் குறைந்த பட்சமான தொகையை ஒரு நாளுக்கு வைத்திருப்பார்கள்.
    • அவர்களுக்கு வேறு வேலைக்குப் போக முடியாத நிலையில் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

    தமிழ்த்திரையுலகம் வியாபாரத்திலும், படைப்பு ரீதியாகவும் இன்று பாலிவுட்டிற்கு இணையாக வளர்ந்து நிற்கிறது. ஒரு பக்கம் தியேட்டர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஓடிடி தளங்களை நோக்கி திரைப்படத் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சியெல்லாம் திரையுலகில் இருக்கும் ஒரு பகுதியினருக்குத்தான் என்பதுதான் கவலைக்குரிய செய்தி.

    முன்னணி நட்சத்திரங்கள் சம்பளம் கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் நிலை ஒரு பக்கம், குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர்கள், துணை நடிகர்கள் குறிப்பாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் நடிகர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. படத்தின் கதையோட்டத்திற்குக் கைகொடுப்பது துணைக் கதாபாத்திரங்கள்தான்.

    2 நாள் 10 நாள் என்று இவர்களுக்குச் சம்பள மாகப் பேசப்படுகிறது. கொரோனாவுக்கு முந்தைய சூழலில் இவர்களின் வாழ்க்கை வளமாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் சிறிய நடிகர்களின் சம்பளத்தை ஒரு நாளைக்கு ரூ. 1000, ரூ.3000 வரைக்கும் குறைத்துப் பேசி அவர்களைச் சரிக்கட்டி விடுகிறார்கள். அந்த வாய்ப்பை மறுத்தால் அடுத்தப்படத்திற்கு வாய்ப்புக் கிடைக்காது என்பதாலும், வாழ்வாதாரத்திற்கு அந்தத்தொகை பயன்படும் என்பதாலும் நகைச்சுவை நடிகர்கள் சிலர் அதை ஒப்புக்கொள்கிறார்கள்.


    அப்பு குட்டி

    இவர்களுக்கான குறைந்த பட்ச சம்பள அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது., சமீபத்தில் காமெடி நடிகர் முத்துக்காளை ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் என்று பேசி வெறும் 1500 ரூபாய்க்கு இறுதியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதனை வேதனையோடு நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

    இது பற்றி தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி பேசும்போது, என்னை மாதிரியான நடிகர்கள் குறைந்த பட்சமான தொகையை ஒரு நாளுக்கு வைத்திருப்பார்கள். இது அவர்களின் குடும்பச்சூழலைச் சமாளிப்பதற்கு போதுமானதாக இருக்கும். அவர்களுக்கு வேறு வேலைக்குப் போக முடியாத நிலையில் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இதையும் குறைத்துக் கொடுத்தால் என்ன செய்வது. நான் ரூ.1 லட்சம் வாங்குகிறேன். ஆனால் இதுதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் நல்ல கதைகள், பாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இவற்றை வைத்துக் குறைத்துக் கொள்கிறோம்.

    5 ஆயிரம் ரூபாய்க்கும் 3ஆயிரம் ரூபாய்க்கும் நடிக்கச்சொல்லும்போது தான் வேதனையாக இருக்கிறது என்றார். விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் இருந்த போது இதுபோன்ற சிறிய பாத்திரத்தில் நடிக்கும் கலைஞர்களுக்காகப் பேசி அவர்களுக்குக் கூடுதல் தொகையைப் பெற்றுத்தந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் இப்போது யார் இந்தப் பிரச்சினையைப் பேசுவது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரமாஸ்திரா.
    • இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த திரைப்படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    பிரமாஸ்திரா

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூர் பிரமாஸ்திரா -2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பிரமாஸ்திரா 2 மற்றும் 3 பண்ண இருக்கிறோம். அதற்கான கதையை இயக்குனர் அயன் முகர்ஜி எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரமாஸ்திரா 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    மாரி செல்வராஜ், மாமன்னன், உதயநிதி ஸ்டாலின், mari selvaraj, maamannan, udhayanidhi stalinபரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. சமீபத்தில் நடிகர் வடிவேலு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தது.


    மாமன்னன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு 'மாமன்னன்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
    • இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.


    லால் சலாம்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    லால் சலாம் போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


    • அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பரத்வாஜ்.
    • இப்படம் குறித்து பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

    அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தவிர்க்க முடியாத கூட்டணியாக மாறியது.

     

    காதல் மன்னன்

    காதல் மன்னன்


    இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

    ×