என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பரத்வாஜ்.
    • இப்படம் குறித்து பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

    அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தவிர்க்க முடியாத கூட்டணியாக மாறியது.

     

    காதல் மன்னன்

    காதல் மன்னன்


    இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

    • ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரிக்கோ பிரவுனிங்.
    • 93 வயதாகும் ரிக்கோ பிரவுனிங் உடல்நலக் குறைவால் காலமானார்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் ரிக்கோ பிரவுனிங். இவர் 1950-களின் 3 டி கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படமான 'கிரியேச்சர் பிரம் த பிளாக் லகூன்' என்ற படத்தில் நீருக்கடியில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானார். பிளிப்பர் என்ற ஹாலிவுட் படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. சில படங்களையும் இயக்கியும் ஸ்டண்ட் நடிகராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    இவர் ஒரு நீச்சல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்கோ பிரவுனிங் வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி ரிக்கோ பிரவுனிங் மரணம் அடைந்தார். 93 வயதாகும் ரிக்கோ பிரவுனிங் மறைவுக்கு நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    பா.இரஞ்சித்

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.


    பா.இரஞ்சித்

    இதையடுத்து 'தங்கலான்' படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' என குறிப்பிட்டு பா.இரஞ்சித் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    கண்ணை நம்பாதே

    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.


    கண்ணை நம்பாதே

    இதையடுத்து, 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பருந்தாகுது ஊர் குருவி’.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பருந்தாகுது ஊர் குருவி'. இப்படத்தி காயத்திரி ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடாங்கி வடிவேல், இ ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை லைட்ஸ் ஆன் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ரெஞ்சித் உண்ணி இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது, " தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குனராக இருக்கும்போது, நான் ஆபிஸ் பாயாக இருந்தேன். எனக்கு முன்னாலே அவர் இயக்குனராக வேண்டியவர். அவரை அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை.


    சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவர்களிடம் இருந்து தான் சினிமாவே கற்றுக்கொண்டேன். இத்தனை நீண்ட கால போராட்டத்தைக் கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்ட விதம் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணாவுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். மேலும் இந்தப்படக்குழுவிற்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

    இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் பேசியதாவது, "நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர் கற்றுக்கொடுத்தது தான் எல்லாம். அவருக்கு நன்றி. இந்தப்படம் நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப்படம். சுரேஷ் சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கடைசி வரை உடனிருக்கும் நண்பர்கள். வெங்கி சந்திரசேகர் மற்றும் அருண் ஆகியோரும் எங்களுடன் இணைந்து பயணிக்கும் நண்பர்கள்.


    இந்தப்படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின் நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி சிறப்பாக பணியாற்றியுள்ளனர். நடிகர்கள் படக்குழுவில் பணியாற்றிய அனைவரும் அவர்கள் படம் போல் வேலை செய்தார்கள். எல்லோருக்கும் நன்றி. என் உதவியாளர்கள் நாளைய உதவி இயக்குனர்கள். இந்தப்படம் ஒரு சிறப்பான அனுபவம் தரும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து, ஆதரவளியுங்கள் நன்றி' என்று கூறினார்.

    • பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.
    • இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார்.

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


    சார்பட்டா பரம்பரை

    1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.


    சார்பட்டா பரம்பரை

    மேலும், சார்பட்டா பரம்பரை பட காட்சிகளை வைத்து பல மீம்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சார்பட்டா பரம்பரை -2 போஸ்டர்

    இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் 'Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட Round 2' என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • பரிதாபங்கள் யூ டியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர்.
    • வடமாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு கோபி மற்றும் சுதாகர் தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

    பரிதாபங்கள் என்ற யூ டியூப் சேனல் ஆரம்பித்து நகைச்சுவையான பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றவர்கள் கோபி, சுதாகர். இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து இவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர்.

    இந்த வீடியோ மிகவும் டிரெண்டானது. அதில், தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வினையும் இருவரும் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தனர்.


    சுதாகர் -கோபி

    இந்நிலையில், ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது தவறானது. இதனால், பிரபல யூ டியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் யூ டியூப் சேனலை தடை செய்து தமிழக அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், வட மாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரபல யூடியூபர்களான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் தான் காரணம் என்றும் அவர்களது சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் அஜித் குமார் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து விட்டார்.
    • தற்போது அவரது இரண்டாம் கட்ட உலக மோட்டார் சைக்கிள் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

    இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.

    தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளார். இது குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு , அஜித் குமார் துவங்க இருக்கும் 2-ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் அஜித் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • தமிழில் பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை
    • இவர் தற்போது தனக்கு உதவி செய்யுமாறு விடியோ ஒன்றை வெளியிட்டு கேட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில், என்னம்மா கண்ணு, பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. எவர்கிரீன் மூவிஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நிறைய படங்களை தயாரித்து இருக்கிறார்.

    இவரது சில படங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்ததால் தான் சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து உள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ துரை தான் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    வி.ஏ.துரை

    அந்த வீடியோ பதிவில், நான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளது. என்னை கவனித்துக் கொள்ள ஆளில்லாத பரிதாபமான நிலைமையில் இருக்கிறேன். மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன். அதனால் யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் " என்று கூறினார்.

    மேலும், நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் தன் நிலையை எடுத்துக்கூறி உதவுமாறும், திரைத்துறையினரும் தயாரிப்பாளர் சங்கமும் மருத்துவ உதவிகள் கிடைக்க தனக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் இந்த சூழ்நிலையை அறிந்த சூர்யா வி.ஏ. துரையின் மருத்துவ செலவுக்காக ரூபாய் 2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகை அனிகா விக்ரமன் ‘எங்க பாட்டன் சொத்து’, ‘விஷமக்காரன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

    மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான அனிகா விக்ரமன் தமிழில் 'எங்க பாட்டன் சொத்து', 'விஷமக்காரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.


    அனிகா விக்ரமன்

    இது குறித்து அனிகா விக்ரமன் கூறியிருப்பதாவது, " பல ஆண்டுகளாக அனூப் பிள்ளை மனதளவிலும் உடலளவிலும் என்னை துன்புறுத்தி வந்தார். அவர் என்னை இரண்டாவது முறையாக துன்புறுத்தியபோது, பெங்களூர் போலீசில் புகாரளித்தேன். முதலில் சென்னையில் வைத்து என்னை அடித்தார். அன்று அவர் அழுது புலம்பி கெஞ்சி கேட்டதால் நான் புகாரளிக்கவில்லை. நான் முட்டாளாக இருந்தேன்.


    அனிகா விக்ரமன்

    இரண்டாவது முறையாக அவர் என்னை அடித்த போது நான்புகாரளித்தேன். ஆனால் அவர் போலீசாரிடம் பணம் கொடுத்து என்னை சிக்க வைத்தார். போலீசார் தன்னுடன் இருப்பதாக நினைத்து அவர் தொடர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார். நான் படப்பிடிப்பிற்கு செல்வதை தடுக்க எனது செல்போனை தூக்கி எறியும் அளவிற்கு சென்றார். ஹைதராபாத் செல்வதற்கு முன், எனது போனை ஆப் செய்து விட்டு என்னை உடல் ரீதியாக தாக்கினார்.


    அனிகா விக்ரமன் வெளியிட்ட புகைப்படம்

    அவர் என் மேல் ஏறி அமர்ந்தார். வாய் மற்றும் மூக்கில் தாக்கினார். காயம்பட்ட முகத்துடன் எப்படி நடிப்பாய் என்று பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அடித்தார். நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைய பல நாட்கள் ஆனது. அவனுடைய கொடுமையை என்னால் மன்னிக்க முடியாது. தற்போது நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார். இதையெல்லாம் வெளிப்படையாக எழுதுகிறேன்" என கூறினார்.


    • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன்.
    • இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


    ருத்ரன்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    ருத்ரன்

    இதையடுத்து சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' படப்பிடிப்பு தளத்தில் ஊனமுற்றோர்களை சந்தித்தார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    கருமேகங்கள் கலைகின்றன

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன், பாரதி ராஜா, யோகிபாபு, அதிதி பாலன் இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


    ×