பாரதி ராஜா படத்தின் போஸ்டர் வெளியிட்ட கமல்ஹாசன்

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
கருமேகங்கள் கலைகின்றன படக்குழு
கருமேகங்கள் கலைகின்றன படக்குழு
Published on

இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

கருமேகங்கள் கலைகின்றன

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கவுதம் மேனன், பாரதி ராஜா, யோகிபாபு, அதிதி பாலன் இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com