என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


    சிம்பு - ஒபலி என் கிருஷ்ணா

    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.


    ஒபலி என் கிருஷ்ணா பதிவு

    இந்நிலையில், 'பத்து தல' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பு.
    • இவர் தற்போது தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம்டைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

     

    குஷ்பு

    குஷ்பு


    இந்நிலையில் நடிகை குஷ்பு சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பெண் அல்லது பையனை என்பது அல்ல. என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார். தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன். எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு இருந்தது.

     

    குஷ்பு

    குஷ்பு


    தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்ததால், பல ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அம்மா என்னை நம்பவில்லை. ஆனால் 15 வயதில் அது போதும் என்று நினைத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களை நிர்கதியாக விட்டு சென்றார். அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் என்னை சிறுவயதிலேயே மன உறுதியை படைத்தவளாக மாற்றியது" என்று கூறினார். நடிகை குஷ்புவின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • அமிதாப் பச்சன் சண்டை காட்சி ஒன்றில் நடிக்கும்போது வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

     

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்


    இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்த பின்னர் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.


    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சன்

    இந்த விவரங்களை அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். "மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ஏ.ஆர்.ரகுமானி மகன் ஏ.ஆர்.அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் தடம் பதித்து வருகிறார்.
    • இவர் பாடல் படப்பிடிப்பு விபத்திலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது மகன் ஏ.ஆர்.அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் தடம் பதித்து வருகிறார். இவர் பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடந்த பாடல் படப்பிடிப்பின் போது ஏ.ஆர்.அமீன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதிலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

     

    விபத்து நடந்த புகைப்படம்

    விபத்து நடந்த புகைப்படம்


    அவர் பதிவிட்டிருப்பது, "மேடையின் நடுவில் நின்றுகொண்டு பாடல் பாடி கொண்டிருந்தோம். பாடல் பாடுவதில் மூழ்கி இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நானும் என் குழுவும் நூலிழையில் உயிர் தப்பினோம். அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இன்று பாதுகாப்பாக, உயிர் உடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மேலும் விபத்து ஏற்பட்ட கிரேன் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளார்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

     

    மார்க் ஆண்டனி

    மார்க் ஆண்டனி


    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.


    சிரஞ்சீவி கதாப்பாத்திரத்தில் செல்வராகவன்
    சிரஞ்சீவி கதாப்பாத்திரத்தில் செல்வராகவன்

    இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனர் செல்வராகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இதில் சிரஞ்சீவி என்ற கதாப்பாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் செல்வராகவனின் இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி'.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    'குலேபகாவலி, 'ஜாக்பாட்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண், தற்போது காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் 'கோஸ்டி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஆடுகளம் நரேன், மனோபாலா, ராஜேந்திரன், மயில்சாமி, ராதிகா, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

     

    கோஸ்டி

    கோஸ்டி


    சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் 'கோஸ்டி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த தற்கொலை தொடர்பாக 500 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான துனிஷா சர்மா, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டபோது, திடீரென தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில், போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.


    துனிஷா சர்மா

    காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. நடிகை துனிஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சக நடிகரான ஷீசன் கான் என்பவரை வாலிவ் நகர போலீசார் கைது செய்து, கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.


    துனிஷா சர்மா - ஷீசன் கான்

    இந்த தற்கொலை தொடர்பாக 500 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள தனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்கும்படி நடிகர் ஷீசன் கான் மும்பை வசாய் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் நடிகர் ஷீசன் கானுக்கு ஜாமின் வழங்கியது.


    ஷீசன் கான்

    1 லட்ச ரூபாய் பிணையில் ஷீசன் கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும், அவர் தன் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதையடுத்து ஷீசன் கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து தானே சிறையில் இருந்து நடிகர் ஷீசன் கான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    லியோ படக்குழு

    இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


    ஒளிப்பதிவாளர் பதிவு

    இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உயர்தர Red V RAPTOR XL வகை கேமரா 'லியோ' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு 'லியோ' படத்தில் விஷூவல் ட்ரீட் காத்திருக்கு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகர் வெற்றி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’.
    • இப்படம் வருகிற 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெமரீஸ்'. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்க பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.


    சிஜு தமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் வெற்றி பேசியதாவது, "எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள்,  கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.


    இயக்குனர் ப்ரவீன் பேசியதாவது, "மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்." என்று பேசினார்.


    இயக்குனர் ஷியாம் பேசியதாவது, "நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன்.  இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி." என்று பேசினார்.

    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் வருகிற மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    கண்ணை நம்பாதே

    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.


    கண்ணை நம்பாதே

    இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான்.
    • இவர் புகைப்படக்காரர்களை கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சையிப் அலிகானும் கரீனா கபூரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினார்கள்.


    சையிப் அலிகான் - கரீனா கபூர்

    அப்போது வீட்டின் எதிரே சில புகைப்படக்காரர்கள் காத்து நின்றனர். சையிப் அலிகான் மனைவியுடன் வந்ததும் இருவரையும் புகைப்படம், எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதோடு அவர்களை பின் தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்றுவிட்டனர். இதனால் கோபமான சையிப் அலிகான் ஒன்று செய்கிறீர்களா. அப்படியே எங்கள் படுக்கை அறைக்கே வந்து விடுங்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.


    சையிப் அலிகான் - கரீனா கபூர்

    உடனே புகைப்படக்காரர்கள் பின்வாங்கினர். பின்னர் புகைப்படக்காரர்கள் பார்த்து கோபமாக கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றார். சயீப் அலிகான் கோபப்பட்டு பேசும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. சமீபத்தில் இந்தி நடிகை அலியாபட் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று சிலர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது.

    • நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சூர்யா

    இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு துல்கர்சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சீதாராமம்' படத்தை இயக்கிய இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஹனு ராகவபுடி

    மேலும், இயக்குனர் இந்த கதையை முதலில் நடிகர் ராம் சரண் மற்றும் நானியிடம் கூறியுள்ளதாகவும் அவர்கள் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இந்த கதையை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×