என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    துல்கர் சல்மான் பட இயக்குனருடன் இணையும் சூர்யா?
    X

    சூர்யா

    துல்கர் சல்மான் பட இயக்குனருடன் இணையும் சூர்யா?

    • நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சூர்யா

    இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு துல்கர்சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சீதாராமம்' படத்தை இயக்கிய இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஹனு ராகவபுடி

    மேலும், இயக்குனர் இந்த கதையை முதலில் நடிகர் ராம் சரண் மற்றும் நானியிடம் கூறியுள்ளதாகவும் அவர்கள் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இந்த கதையை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×