என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சூர்யா

    இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் சூர்யா தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு துல்கர்சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சீதாராமம்' படத்தை இயக்கிய இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஹனு ராகவபுடி

    மேலும், இயக்குனர் இந்த கதையை முதலில் நடிகர் ராம் சரண் மற்றும் நானியிடம் கூறியுள்ளதாகவும் அவர்கள் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இந்த கதையை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ருத்ரன்’.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.


    ராகவா லாரன்ஸ்

    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    ருத்ரன் படப்பிடிப்பு தளம்

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தில் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில், 'ருத்ரன்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஊனமுற்றோர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "ருத்ரன் படப்பிடிப்பு தளத்தில் என் தம்பிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார். 

    நடிகர் ராகவா லாரன்ஸ் ஊனமுற்றோர்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து இவர் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    அல்லு அர்ஜுன்

    இதைத்தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.


    அல்லு அர்ஜுன் பகிர்ந்த புகைப்படம்

    'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பூஷன் குமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "இந்த கூட்டணிக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சந்தீப் ரெட்டி வாங்காவின் மந்திரம் தனிப்பட்ட முறையில் என்னைத் தொடும் ஒன்று. நெடுங்காலமாக நினைவில் நிற்கும் ஒரு படத்தை தருவோம் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார்.
    • கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் நடந்தது. இதில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.


    ஆரணியில் சாமி தரிசனம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

    எஸ்.ஏ.சந்திரசேகர் வந்த தகவல் ஆரணி முழுவதும் பரவியதால் விஜய் ரசிகர்கள் கோவில் வளாகம் முன்பு குவிந்தனர். தரிசனம் முடித்து வெளியே வந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அரசியலில் நடிகர்கள் தொடர்ச்சியாக பின்னடைவை சந்திக்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து சென்றார்.

    • நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘அகிலன்’.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    இந்நிலையில், 'அகிலன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அழுத்தமான வசனங்களுடன் வெளியாகியுள்ள இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    • தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வலைதளங்களில் பரவியது.
    • இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு கவனம் பெற்று வருகிறது.

    தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது.

    அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை பீகார் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன.


    கஸ்தூரி

    இதைத்தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழகத்தில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ள நிலையில் நடிகை கஸ்தூரியின் பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. அதில், "வட நாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை . இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை.


    • சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது.
    • இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக பங்கேற்கும் புகைப்படங்களும் வைரலானது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    சித்தார்த் -அதிதி ராவ்

    சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது.

    சமீபத்தில், நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், சித்தார்த் உடனான காதல் வதந்திக்கு அதிதி ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.


    சித்தார்த் - அதிதி ராவ்

    இது குறித்து அவர் கூறியதாவது, மக்கள் அப்படித்தான் பேசுவார்கள், அதை தடுக்க முடியாது எதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை, அது 'தேவையற்றவை' எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன். தான் விரும்பும் இயக்குனர்களுடன் பணிபுரியும் வரை, பார்வையாளர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.

    சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    வாத்தி

    இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து 'வாத்தி' திரைப்படம் உலகம் அளவில் ரூ.75 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.


    வாத்தி போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் நடிகை இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    கள்வன்

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதையடுத்து, 'கள்வன்' திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


    கள்வன்

    அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'அடி கட்டழகு கருவாச்சி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.




    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படம் நேற்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.


    தி லெஜண்ட் போஸ்டர்

    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது. இதையடுத்து 'தி லெஜண்ட்' திரைப்படம் நேற்று (03.03.2023) டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 12.30 மணிக்கு வெளியானது. இந்நிலையில், இப்படம் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    • நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அகிலன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


    அகிலன்

    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    அகிலன்

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவி பேசியதாவது, "மாநகரம் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு கதை கூறினார். சில காரணங்களால் அந்த படம் பண்ண முடியவில்லை. அவர் விக்ரம் ஷுட்டிங்கில் இருந்த போது எங்களுடைய அகிலன் படப்பிடிப்பு அங்கே நடந்தது. அப்போது எடுத்த புகைப்படம் தான் அது மற்றபடி அவர் இயக்கத்தில் நான் நடிக்கவில்லை" என்று பேசினார்.

    • நடிகர் சிம்பு தற்போது நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


    பத்து தல

    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    பத்து தல போஸ்டர்

    இந்நிலையில், 'பத்து தல' படத்தின் டீசர் ஒரே நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    ×