நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'தி லெஜண்ட்'

இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'.இப்படம் நேற்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
தி லெஜண்ட்
தி லெஜண்ட்
Published on

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

தி லெஜண்ட் போஸ்டர்

மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது. இதையடுத்து 'தி லெஜண்ட்' திரைப்படம் நேற்று (03.03.2023) டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 12.30 மணிக்கு வெளியானது. இந்நிலையில், இப்படம் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக லெஜண்ட் சரவணன் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com