என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை தமன்னா தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபகாலமாக இவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    தமன்னா

    சமீபகாலமாக தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் அதிகம் பரவி வருகின்றன. இதுதொடர்பாக நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. இதை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.


    தமன்னா

    இதற்கு முன்பு தமன்னாவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு நடிகை ஷாலு சவுராசியா ஹைதராபாத்தில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
    • இவர் வாலிபர் தன்னை பின் தொடர்வதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

    பிரபல இளம் தெலுங்கு நடிகை ஷாலு சவுராசியா. இவர் ஹைதராபாத்தில் உள்ள கே.பி.ஆர். பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். இந்த நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின் தொடர்ந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகார் செய்துள்ளார். ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.


    ஷாலு சவுராசியா

    நடிகை ஷாலு சவுராசியாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். வாலிபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் நடிகையை பின் தொடரவில்லை என்றும், தானும் நடைபயிற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அந்த வாலிபர் சொல்வது உண்மை என்று உறுதிப்படுத்தினர்.

    கடந்த 2021-ஆம் ஆண்டு இதே பூங்காவில் நடிகை ஷாலு சவுராசியா நடைபயிற்சிக்கு சென்றபோது ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அப்போது ஷாலு சவுராசியா கூச்சல் போட்டதால் அவரது பர்ஸ், செல்போனை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். அந்த பயத்தில் இன்னமும் இருப்பதாலேயே நடைபயிற்சி செய்தவர் தன்னை பின் தொடர்வதாக ஷாலு சவுராசியா புகார் அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகைக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.
    • இப்படம் ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.


    மாமனிதன்

    யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    சமீபத்தில் இப்படம் 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றது. இதையடுத்து 56-வது ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 25 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இதில் 'மாமனிதன்' திரைப்படம் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    மாமனிதன்

    மேலும், அந்த பதிவில், "இதில் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன் Golden Globe Award விட வயதில் மூத்த திரைப்பட விழா. பண்ணைப்புரத்தில் அவர் ஜனித்த இடத்தில் எடுத்தப் படம் என்பதாலும் அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடல் நான் இருப்பதனால் Meastro கலந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’.
    • இப்படம் 50 நாட்களை கடந்துள்ளதாக சமீபத்தில் போஸ்டர் வெளியானது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.


    வாரிசு

    இப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து சமீபத்தில் 'வாரிசு' திரைப்படம் 50 நாட்களை கடந்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் போஸ்டர்கள் வெளியிட்டு கொண்டாடினர் . இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியின் வீடியோவை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கஸ்டடி போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு இன்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தின் கதாபாத்திரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் அரவிந்த சாமி 'ராஜு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான போஸ்டரை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    இந்நிலையில், 'பத்து தல' திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவி நடிகை சாய்ஷா ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இவர் தமிழில் 'வனமகன்', 'கடைக்குட்டி சிங்கம்', 'காப்பான்' போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இதில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டனர். இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.




    • நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் ‘பதான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார்.


    தீபிகா படுகோனே

    சமீபத்தில் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்த "பதான்" திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். இப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற 12- ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.


    ஆஸ்கர் தொகுப்பாளர் பட்டியல்

    இதில் தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    • நானி நடித்துள்ள ’தசரா’ திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    தசரா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' திரைப்படத்தில் மூன்றாவது பாடலான 'மைனரு வேட்டிக்கட்டி' பாடல் வருகிற மார்ச் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகர் சிம்பு தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
    • இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

     

    சொப்பன சுந்தரி படக்குழு

    சொப்பன சுந்தரி படக்குழு


    இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, ''கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குனர்கள் தான். 'கனா' படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அருண் ராஜா, 'க /பெ ரணசிங்கம்' படத்தை வழங்கிய இயக்குனர் விருமாண்டி, 'சொப்பன சுந்தரி' படத்தை வழங்கிய இயக்குனர் சார்லஸ் என இவர்கள்தான் காரணம். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குனர்கள் தான் பொறுப்பு. ஒரு இயக்குனர் தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும், பிரமிப்பாகவும், காட்சிப்படுத்த முடியும். அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.

    இயக்குனர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கோபத்துடன் கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவுதான். அதன் பிறகு கோபத்தால் எதுவும் நிகழாது. அதனால் இழப்பு ஏற்படுவது தான் அதிகம். நான் வாழ்க்கையில் நிறைய முறை கோபப்பட்டிருக்கிறேன். அதனால் ஏராளமானவற்றை இழந்திருக்கிறேன். பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். அவருடைய அணுகுமுறையைக் கண்டு வியந்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும். எந்த ஒரு கலைஞரையும் காத்திருக்க வைக்காமல், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். என்னுடைய பங்களிப்பை முப்பது நாளில் நிறைவு செய்தார்.

     


    ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குனர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால். அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குனர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

    'சொப்பன சுந்தரி' படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால், மற்றவர்களை சிரிக்க வைப்பது. கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமல்ல. இது சரியாக செய்து விட்டால்.. அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன். இப்படம் முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இயக்குநர் சார்லஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் அளவிற்கு உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. '' என்றார்.

    • நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
    • ’கஸ்டடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    கஸ்டடி படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா ரசிகர்களுக்கு அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அன்புள்ள நாகசைதன்யா ரசிகர்களே உங்கள் உற்சாகத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. 'கஸ்டடி' படத்தின் டீசர் வேலை நடக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.

    'கஸ்டடி' திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×